சென்னை, பிப். 6 - தொழிலாளர்களை, தமிழ கத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து வியாழ னன்று (பிப்.6) சென்னையில் அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய தொமுச தலை வர் கி.நடராஜன், “பட்ஜெட்டிற்கு முன்பாக நிதியமைச்சர் மத்திய தொழிற்சங்கங்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அவற்றில் ஒன்றைக்கூட கணக்கில் கொள்ளாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார். சுமார் 135 கோடி மக்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் பட் ஜெட் வழங்கவில்லை. விவசாயி கள் விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, கடன் தள்ளு படி, உரமானியம் கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒன்றிய அரசு உர மானியம், உணவு மானியம் உள்ளிட்டு அனைத்து மானியங்களையும் வெட்டியுள்ளது. சமையல் எரிவாயு மானியம் அளிப்பதற்கான மானியத்தில் 17.2 விழுக்காட்டை வெட்டியுள்ளது” என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டிற்கு புதிதாக ஒரு ரயில் திட்டம் கூட அறிவிக்க வில்லை. மெட்ரோ ரயிலுக்கு நிதி ஒதுக்கவில்லை. சாலை திட்டங்கள் ஏதும் இல்லை. ஒன்றிய பட்ஜெட் தமிழகத்தையும், தொழிலாளர் களையும் புறக்கணித்துள்ளது” என்றும் நடராஜன் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர்கள் சி.திருவேட்டை, பா.பாலகிருஷ்ணன், ஏஐடியுசி தலைவர் காசி விஸ்வநாதன் மற்றும் சடையாண்டி (ஏஐயுடியுசி), அதிய மான் (ஏஐசிசிடியு) ஏ.எஸ்.குமார் (யுடியுசி) உள்ளிட்டு எச்எம்எஸ், ஐஎன் டியுசி, ஏஐஐசிடியு, ஏஐயுடியுசி, டபிள்யுபிடியுசி, எல்எல்எப், எம்எல் எப், எல்டியுசி, டியுசிசி தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.