ஒன்றிய அரசின் சார்பில் வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு, “தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் கொள்கைத்திட்டம்” (“National Policy Framework on Agricultural Marketing (NPFAM)”) ஆர்எஸ்எஸ்/பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் இழிவான நோக்கங்களை வெளிப்படுத்தி இருக்கிறது. இது விவசாயிகளின் நலன்களைக் காவு கொடுத்து, கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக கொண்டுவரப்படும் ஒரு சதித் திட்டமேயாகும்.
வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்த பட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக நிர்ணயம் செய்வது குறித்தோ, வேளாண்மையில் பொது முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாகவோ, விவசாயி கள் சார்பு கடன் வசதிகள் தொடர்பாகவோ மற்றும் இதுபோன்று போராடிய விவசாயிகள் இயக்கம் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்பதையே இந்த வரைவு திட்டம் வெளிப்படுத்துகிறது.
அரசுசார் சந்தை கட்டமைப்புகளை ஒழிக்க...
இந்த வரைவு, அரசமைப்புச்சட்டத்தின் 246ஆவது பிரிவின்கீழ் வேளாண் சந்தை என்பது மாநில அரசின்கீழ் வரக்கூடிய திட்டமே என்ற உண்மை யைக் கூறி உதட்டளவில் சேவை செய்துள்ள அதே சமயத்தில், இந்த வரைவு திட்டத்தை நுணுகி ஆராய்ந்தோமானால் அது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும், மாநில அரசாங்கங்களின் அதிகாரங்கள் மீதும் தாக்குதல் தொடுத்திருப்பதையும், அரசுகளின் ஆதரவுடனான சந்தை உள்கட்டமைப்பு வசதிகளை ஒழித்துக்கட்டியிருப்பதையும், வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களின் (APMC-Agricultural Produce Market Committees) பங்களிப்புகளை ஒழித்திடவும், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் தனியார் வர்த்தகச் சூதாடிகளின் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதற்கு வழிவகுத்திருப்பதையும் காண முடியும்.
வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சிலமுக்கிய மான பரிந்துரைகள், தனியார் மொத்த சந்தைகளை நிறுவவும், கார்ப்பரேட் பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்திடவும், பாரம்பரியமாக இருந்து வரும் சந்தை முற்றங்களையும், கிடங்குகளையும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்திடவும் வகை செய்கின்றன. மேலும் மாநிலம் முழுவதும் ஒரேவிதமான சந்தைக் கட்டணத்தை அறிமுகம் செய்திடவும், வர்த்தக உரிம முறையை அறிமுகம் செய்திடவும் வழிவகுத்திருக்கிறது. இந்த வரைவு, இப்போது இருந்துவரும் வேளாண் சந்தை கமிட்டி களை ஓரங்கட்டிவிட்டு, கார்ப்பரேட்டுகள் நேரடி யாகவே விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை வாங்கிடவும் முன்மொழிகிறது.
மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல் எனும் சதித்திட்டம்
ரிலையன்ஸ் மற்றும் அதானி உள்ளிட்ட பெரிய வணிக நிறுவனங்கள், ஹரியானாவின் சிர்சா மற்றும் பஞ்சாபின் லூதியானாவில் விரிவான கிடங்கு உள்கட்ட மைப்பு மற்றும் தனியார் ரயில்வே நெட்வொர்க்கு களை அமைத்திருக்கின்றன. வேளாண் விளை பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பதை கார்ப்பரேட் நிறுவனங்களும், சர்வதேச நிதி மூலதனமும் கடுமையாக எதிர்த்தே வருகின்றன. ஏனெனில் அவற்றின் நோக்கமெல்லாம் விவசாய விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்து, பின்னர் அதன் மதிப்பினைக் கூட்டி, சந்தைப்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்பதேயாகும். இந்த விதத்தில் பெரும் வர்த்தக நிறுவனங்கள் விவ சாயிகளையும், அதே போல நுகர்வோரையும் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. வேளாண் சந்தையைத் திறன் படுத்துகிறோம் என்ற பெயரில் ஒன்றிய அரசு கார்ப்ப ரேட்டுகள், வேளாண் பொருள்களைக் கொள்ளைய டிப்பதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
விவசாயிகளை வறுமையிலும் தற்கொலையிலும் தள்ள
இந்த வரைவில், விவசாயிகளுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துக்கொள்ளும் கார்ப்பரேட்டுகளும், வர்த்தகர்களும் அவர்களால் அளிக்கப்படும் மூலப் பொருள்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ண யம் செய்திடவோ மற்றும் குறைந்தபட்ச விலையை விவசாயிகளுக்குக் கொடுத்திடவோ எவ்விதமான ஒழுங்குமுறை விதிகளும் இல்லை. பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு சரணடைந்து, விவசாயிகள் இப்போது இருப்பதுபோலவே எப்போ தும் தற்கொலைப் பாதையிலேயே செல்வதற்கும், அவர்களை வறுமைக் குழியில் தள்ளுவதற்குமான நடவடிக்கைகளையே எடுத்திருக்கிறது.
சுய முரண்பாடு...
குறிப்பிடத்தக்க வகையில், வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்கள் சட்டம் என்னும் ஏபிஎம்சி சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு பீகார் மண்டிகளின் “மோச மான” நிலையை இந்த வரைவு ஆவணப்படுத்துவது சுய முரண்பாடானதாகும். புகழ்பெற்ற தில்லி விவ சாயிகள் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில், ஆர்எஸ்எஸ்-பாஜக தலைவர்களும், ஒன்றிய அரசுக்கு நெருக்கமான கார்ப்பரேட்டுகளின் நலன்க ளும் பீகார் ஏபிஎம்சி சட்டத்தை ஒழித்தது விவசாயச் சந்தைகளை ஒழுங்குமுறையிலிருந்து நீக்குவ தற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்ற கதையை பரப்பி வந்ததால் இது சுய முரண்பாடானதாகும்.
வர்க்கப் பாசம்...
இந்த வரைவானது, விவசாயத்தை கார்ப்பரேட்மய மாக்க வேண்டியது அவசியம் என்று தெள்ளத்தெளி வாகவே கூறுகிறது. விவசாயச் “சீர்திருத்தத்திற்கு” அது ஒன்றே வழி என்று அது பார்க்கிறது. உதாரண மாக, இந்த வரைவு திட்டத்தில் மோடியின் செல்லத் திட்டமான விவசாயி உற்பத்தியாளர் அமைப்புத் திட்டம் (Farmer Producer Organisation Scheme), கார்ப்பரேட்டுகள் ஊடுருவலை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது, விவசாயத்தில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களு டன் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள் ஒப்பந்த அடிப்படையில் இணைவதற்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்க வழிசெய்து கொடுத்தி ருக்கிறது. விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள் திட்டத்தை மேம்படுத்துவதன் பின்னணியில் சிஐஐ மற்றும் எப்ஐசிசிஐ (CII & FICCI) போன்ற வர்த்தகக் கார்ப்பரேட் நிறுவனங்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்த்தோமானால் அவற்றின் வர்க்கப்பாசம் தெள்ளெ னத் தெரியும்.
உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து
எதிர்கால மற்றும்விருப்ப சந்தைகள் மூலம் நிதிமய மாக்கலை ஆழப்படுத்துவதற்கான பரிந்துரைகளிலும் பெரிய வணிக நிறுவனங்களின் பிடி தெளிவாகத் தெரி கிறது. இது பன்னாட்டு நிறுவனங்களும் சர்வதேச நிதி மூலதனமும் உள்நாட்டு உணவுத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தவும் கட்டுப்படுத்தவும் அனு மதித்திடும். அதன் மூலமாக, இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்திடும்.
எனவேதான் இந்த வரைவுக்கு கடுமையான எதிர்ப்பு தொடங்கியுள்ளது. சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) நடத்திய நாடு தழுவிய போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி, டிசம்பர் 23 அன்று ஆர்ப்பாட்டங்களிலும், ஜனவரி 26 அன்று டிராக்டர்/வாகனப் பேரணிகளிலும் வரைவை எரித்துள்ளது. கடந்த மாதம் ஹரியானாவின் தோஹானா மற்றும் பஞ்சாபின் மோகாவில் இரண்டு பெரிய கிசான் மகாபஞ்சாயத்துக்கள் இணைந்து 75,000க்கும் மேற்பட்ட விவசாயிகளைத் திரட்டின. சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற சம்யுக்த கிசான் மோர்ச்சா கூட்டங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறது.
இந்திய விவசாயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளிடம் சரணடையச் செய்வ தற்கு ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை, அனைத்துத்தரப்பு மக்களையும் அணிதிரட்டி வலுவாக எதிர்த்து முறியடித்திட வேண்டும்.
தமிழில் : ச.வீரமணி