வரலாற்றிலேயே முதல் முறையாக நிலவில் சேகரிக்கப்பட்ட மண்ணை கொண்டு செடியை வளர்த்துள்ளனர் விஞ்ஞானிகள்.
நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணில் தாவரங்கள் வளரும் என்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
1969 மற்றும் 1972 ஆண்டுக்கு இடையில் நடத்தப்பட்ட அப்பல்லோ 11,12 மற்றும் 17 ஆகிய பயணங்களின்போது சேகரிக்கப்பட்ட நிலவின் மண் அடங்கிய 12 மாதிரிகளை கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது அரபிடோப்சிஸ், தாலே க்ரெஸ் ஆகிய தாவரங்களை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் எரிமலை சாம்பல் மற்றும் நிலவின் மண் மாதிரிகள் இரண்டிலும் தாலே க்ரெஸ் வளர்க்கப்பட்டது. எரிமலை சாம்பலை ஒப்பிடும்போது, நிலவின் மண் மாதிரிகள் அதிக தாவர வளர்ச்சியை பெறாது. நிலவின் மண் பரிசோதனையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு வேதியியல் கலவை மற்றும் உலோக துண்டுகளின் இருப்பு ஆகியவை எரிமலை சாம்பலை ஒப்பிடும்போது நிலவின் மண்ணில் தாவர வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை. இருப்பின் இந்த சோதனை முடிவில் நிலவிலிருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரியில் விஞ்ஞானிகள் செடியை வளர்த்துள்ளனர்.
மேலும் நிலவின் மண்ணில் முளைத்த செடிகள், பூமியில் உள்ள தாவரங்களை போல் இல்லாமல் வளர்ச்சிக்குன்றி காணப்பட்டுள்ளது.
இந்த சோதனை மூலமாக நிலவில் ஓரளவுக்கு தாவரங்கள் வளர முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.