ராணுவத்தை வைத்து ஒடுக்குவேன்: சொந்த மக்களுக்கு டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத் தில் சமூக செயல்பாட்டாளர் ஒருவரை காவல்துறை சுட்டுக்கொலை செய்தது. இதனால் அம்மாகாணம் முழுவதும் தொடர் போராட்டங் கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் போராட் டங்களை ஒடுக்க, உள்நாட்டில் ராணுவத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் அவசரகாலச் சட் டத்தை அமல்படுத்தி சொந்த மக்களை ஒடுக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானில் அரசுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும் இவர் சொந்த மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
எதிர்கட்சித் தலைவரை கடத்திய உகாண்டா ராணுவம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 38 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி யோவேரி முசெவேனியை எதிர்த்து, பிரபல பாப் பாடகரும் எதிர்க்கட்சி தலைவருமான பாபி வைன் என்பவர் போட்டியிட்டார். இத்தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாக பாபி வைன் குற்றம் சாட்டினார். தற்போது அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான பாபி வைன் ராணுவத்தால் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - தைவான் வர்த்தக ஒப்பந்தம்
செமிகண்டக்டர் உற்பத்தியில் முன்னணி யில் இருக்கும் தைவானுடனான ஏற்றுமதி வரிகளைக் குறைக்கும் வகையில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இது அமெரிக்கத் தொழில்நுட்பத் துறையில் புதிய முதலீடுகளைக் கொண்டு வரும் என கூறப்படுகிறது. இதனால் அமெ ரிக்காவிற்கு சிப் ஏற்றுமதி செய்து வருகிற டிஎஸ்எம்சி போன்ற தைவான் சிப் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரி 20 சதவிகிதத்தி லிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த பல்கலை. முதல் இரு இடத்திலும் சீனா
2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த அறிவியல் பல்கலைக்கழ கங்களின் தரவரிசைப் பட்டியலை நெதர்லாந்து லைடன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் 2 இடங்களையும் ஜெஜியாங்ம், ஷாங் காய் ஜியாவோ டோங் ஆகிய இரு சீனப் பல்கலைக் கழகங்கள் பிடித்துள்ளன. உலகப்புகழ்பெற்ற அமெ ரிக்கப் பல்கலைக்கழகமான ஹார்வர்டு 3 ஆவது இடத் திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் அறிவியல் செயல்திறனை ஆய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சீன மின்சாரக் கார்கள் : வரியை குறைக்கும் கனடா
சீன ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று கனடா பிரதமர் மார்க் கார்னி சீனா சென்றுள்ளார். ஜி ஜின்பிங்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள், வர்த்தகங்கள் குறித்துப் பேசினார். அதன் பிறகு சீனாவின் மின்சார கார்கள் மீதான கனடாவின் 100 சதவீத வரி குறைக்கப்படும். கனடாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான கனோலா விதைகள் மீதான வரியை சீனா சுமார் 84 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக குறைக்கும் என தெரிவித்துள்ளார்.
