காசா மீது இஸ்ரேல் ராணுவம் அதி காரப்பூர்வமான இனப்படு கொலை போரை துவங்கி 500 நாட்கள் கடந்து விட்டது. இந்த 500 நாட்களில் சுமார் 80 ஆயிரம் பாலஸ்தீன மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலக நாடுகளில் மிக அதிகளவு எழுத்தறிவு, கல்வியறிவு விகிதம் கொண்ட மக்களாக இருந்த பாலஸ்தீனர்க ளின் எதிர்காலம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டது. இஸ்ரேலின் தாக்குதலில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்களும், குழந்தைகளுமே பாதிக் கப்பட்டுள்ளனர். இந்த 500 நாட்களும் போதிய உணவு, குடிநீர், மருந்துகள் இன்றி பிறந்த குழந் தைகள் முதல் பதின்பருவத்தினர் வரை கடுமை யான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்த பட்சம் 25,000 குழந்தைகள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அவை தெரிவித்தி ருந்தது. மேலும் வடக்கு காசாவில் இந்நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு 2 வயதுக்குட் பட்ட குழந்தைகளில் சுமார் 15.6 சதவீதமான குழந் தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர் என 2024 இல் தெரிவிக்கப்பட்டது. 2024 ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி வடக்கு காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உட லில் நீர் பற்றாக்குறை காரணமாக 28 குழந் தைகள் இறந்துள்ளன என மனித உரிமைகள் கண்காணிப்பகம் பதிவு செய்துள்ளது. மேலும் காசா முழுவதும் 95 சதவீதமான பள்ளிக்கட்டிடங்கள் இஸ்ரேல் ராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளன.
2024 செப்டம்பர் மாதம் சுமார் 45 ஆயிரம் பாலஸ்தீன குழந்தைகள் தங் கள் கல்விக்காக முதல் வகுப்பில் நுழைந்து இருக்க வேண்டும். ஆனால் அக்குழந்தைகள் அனைவ ரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடிக் கொண் டிருக்கிறார்கள். 13 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மாணவர்கள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் மட்டுமின்றி 450 க்கும் அதிகமான ஆசிரியர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 13 நூலகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்த சுமார் 150 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட ஆவணங்கள் இஸ்ரேல் ராணு வத்தால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழந்தையும் தற்போது தங்கள் குடும்பத்தையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக தினந்தோறும் ஓடிக் கொண்டி ருக்கிறார்கள். ஆனாலும் சில தன்னார்வலர்க ளும் பாலஸ்தீன இளைஞர்களும் கூடாரங்களில் பாலஸ்தீன குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.