world

நாசா விண்வெளி வீரர்கள் குழுவில் முதல்முறையாக அதிக பெண்கள் பிரதிநிதித்துவம்

நாசா விண்வெளி வீரர்கள் குழுவில் முதல்முறையாக அதிக பெண்கள் பிரதிநிதித்துவம்

வாஷிங்டன்,செப். 24- நாசாவின் 60 ஆண்டுகளுக்கும் மேலான வர லாற்றில் முதல் முறையாக, விண்வெளிக்கு அனுப்பும் விண்வெளி வீரர்கள் குழுவில் அதிக பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.  பத்துப் பேர் கொண்ட குழுவில் ஆறு பெண்க ளும் நான்கு ஆண்களும் உள்ளனர். இவர்கள் பொறியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். இக்குழுவில் முக்கியமாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறு வனத்தின் இரண்டு முன்னாள் ஊழியர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவரான அன்னா மேனன் 2024 இல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் போலாரிஸ் டான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் சென்றுள்ளார். அது வணிகரீதியான விண்வெளி நடைபயணத்தை உள்ளடக்கிய ஒரு சிறப்புமிக்க முதல் முறை செயல்படுத்திய திட்டமாகும். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற அவர்  பிறகு நாசா வால் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். இவ்வாறு நாசாவுக்கு தேர்வான முதல் நபர் என்ற பெருமையையும் அன்னா மேனன் அடைந் துள்ளார். அர்டெமிஸ் திட்டம் மற்றும் நிலவுப் போட்டி நாசாவின் அர்டெமிஸ் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம், மனி தர்களை  நிலவுக்கு அனுப்பி அங்கு அவர்கள் வாழ முடியுமா ? அதற்கான வைப்புகள் என்ன என்பதைப்பற்றி சோதிக்கும் திட்டமாகும். இந்த அனுபவங்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் செவ்வாய் கிரகப் பயணங்களுக்கும் நாசா திட்ட மிட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தற்போதைய புதிய விண்வெளி வீரர்கள் குழு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.  நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் சீனாவிற்கு முன் சாதிக்க வேண்டும் என்ற போட்டியில் நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாசாவின் செயல் தலை வரும், அமெரிக்கப் போக்குவரத்துத் துறைச் செய லாளருமான ஷான் டஃபி, ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, சீனா நாசாவை விட மிக வேகமாக நிலவுக்கு சென்று சேர்வதில் வெற்றி பெற்றால் நான் ஆச்சரியப்படுவேன். ஏனென்றால் அவர்களை விட நாமே இந்த ஆரா ய்ச்சியில் முன்னணியில் உள்ளோம். இந்த ஆரா ய்ச்சியில் சவால்களையும், போட்டிகளையும் நாங்கள் விரும்புகிறோம் என்றும் கூறினார். பயிற்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள்  இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆறு பெண்கள் உள்ளிட்ட 10 புதிய விண்வெளி வீரர்களு க்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சி கொடுக்கப் படும். அதன் பிறகு அவர்கள் விண்வெளிப் பய ணங்களுக்குத் தகுதியடைவார்கள். இதில் புவி யின் தாழ்வான சுற்றுப்பாதைக்கோ அல்லது நில வுக்கோ செல்லும் பயணங்களும் இருக்கலாம். அதுமட்டுமல்ல இப்புதிய குழுவில் உள்ளவர்க ளில் யாரேனும் ஒருவர் செவ்வாய்க் கிரகத்தில் காலடி வைக்கும் முதல் அமெரிக்கர்களில் ஒருவராகவும் இருப்பார் என்றும் டஃபி தெரி வித்துள்ளார்.