tamilnadu

img

வேலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

குடிமனை பட்டா இல்லாத ஏழை மக்கள் அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் விவசாயிகள் மாவட்டத் தலைவர் சி.எஸ்.மகாலிங்கம், முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன், நிர்வாகிகள் ஜி.நரசிம்மன் கோபால.ராஜேந்திரன்,  எம்.கணேஷ் வசந்தகுமார்,  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.குணசேகரன், நிர்வாகி புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.