world

img

தீக்கதிர் உலக செய்திகள்

மர்ம காய்ச்சலுக்கு  53 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மர்ம காய்ச்சலுக்கு சுமார் 50 பேர் பலியாகியுள்ளனர். ஜனவரி மாதம் முதல் மர்மக்காய்ச்சல்  பாதிப்பு  பதிவாகியிருந்தது. இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 53 பேர் பலியாகியுள்ளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் பாதிபேர் 48 மணிநேரத்திற்குள் பலியான தாக உலக சுகாதார அமைப்பு தெரி வித்துள்ளது.

கனடாவில் புதிய விசா விதிமுறைகள்

கனடாவில் புதிய விசா விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் படி மின்னணு விசா, தற்காலிக தங்கும் விசா உள்ளிட்டவற்றை மறுக்கவும், நிராகரிக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல விசாக்காலம் முடிந்த பின்னரும் வெளிநாட்டவர் ஒருவர் கனடாவில் தங்கிவிடுவார் என தோன்றினால் சந்தேகத்தின் பேரிலேயே விசா காலத்திற்கு முன்பே விசாவை ரத்து செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனர்களுக்கான  நிதி முடக்கம் 

காசாவில் உதவி நடவடிக்கைகளுக்கு தேவையான சுமார் 46 மில்லியன் டாலர்கள் முடக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஒருவர்  குற்றம் சாட்டியுள்ளார். அவ்வமைப்பிற்கான நிதியுதவியை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தியதால் இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுகாதார வசதிகளை மறுகட்டமைப்பு செய்வது, உதவி செய்யும் பிற அமைப்புகளுடனான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட 6 அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவர் ரிக் பீப்பர்கார்ன் தெரிவித்துள்ளார்.

‘ஜெலன்ஸ்கியே  ஜனாதிபதியாக நீடிப்பார்’ 

ராணுவச்சட்டம் அமலில் உள்ளவரை ஜெலன் ஸ்கியே உக்ரைனின் ஜனாதிபதியாக நீடிப் பார் என்ற தீர்மானத்தை உக்ரைன் நாடாளுமன் றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இத்தீர்மானத்திற்கு 268 வாக்குகள் கிடைத்துள்ளது. 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தீர்மானத்தின் மீதான வாக் கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அரசியலமைப்பின் படி ஜெலன்ஸ்கி உக்ரைனின் சட்டப்பூர்வமாக தேர்ந் தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக இருக்கிறார் என்றும், போர் நிறுத்தத்திற்கு பிறகு ஜனாதிபதி  தேர்தல் நடத்தப்படும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அமெரிக்க சந்தைக்கு  அலுமினியம் தயார்’

அமெரிக்காவிற்கு 20 லட்சம் கிலோ அலுமினியத்தை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார். ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் கனிம வளங்களை எடுக்க அமெரிக்கா உட்பட எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளார். உக்ரைனின் 50 சதவீத கனிமங்களை அமெரிக்கா கேட்டு வரும் நிலையில் அதனை பயன்படுத்தி ரஷ்யா தனது வணிகத்தை முன்னெடுப்பதாக கூறப்படுகின்றது.