அமெரிக்காவில் ஏற்பட்ட புழுதி புயலால் சங்கிலித் தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகரில் கடந்த ஞாயிறன்று மாலை நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில் அங்கு திடீரென பலத்து காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து அங்குப் புழுதி புயல் உருவானது. இதனால் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு, முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் போனது. இதனை தொடர்ந்து, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று முன்னால் சென்ற ஒரு காரின் மீது மோதி நின்றது. இதையடுத்து லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதின.
இப்படி மொத்தம் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலித் தொடர் விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.