world

img

 கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாத அவலத்தில் ஆப்பிரிக்க நாடுகள்..... உலக சுகாதார அமைப்பு வேதனை...

ஜெனீவா:
கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாத நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மாட்சிடிசோ மொய்தி கூறுகையில், “தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக பத்து ஆப்பிரிக்க நாடுகளில் 9  நாடுகள் கொரோனா தடுப்பூசி இலக்கை எட்ட முடியாமல் உள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தைப்பொறுத்தவரை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் தங்கள் மக்கள்தொகையில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தவது தற்போது முடியாது. இந்த இலக்கை ஆப்பிரிக்க நாடுகளால் அடைய முடியாது. ஏனெனில் மக்கள் தொகையில் பத்தில்ஒரு பங்கு உள்ளவர்களுக்கே தடுப்பூசி செலுத்த 2.5 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. கொரோனா தடுப்பூசிகள் கொரோனா தொற்று மற்றும் இறப்பைத் தடுக்கின்றன. எனவே உலக நாடுகள் கொரோனா தடுப்பூசிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில்உள்ள ஏழை நாடுகளுக்கு கொரோனாதடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன என்று கூறப்படுகிறது.