புயனஸ் அயர்ஸ்
இந்தியாவைப் போலவே தென் அமெரிக்க கண்டத்தில் கொரோனர் வேகமாக பரவி வருகிறது. பிரேசில், அர்ஜெண்டினா, கொலம்பியா, பெரு, சிலி ஆகிய நாடுகள் அங்கு மிக மோசமான விளைவை சந்தித்து வருகிறது.
தென் அமெரிக்காவில் முக்கிய கொரோனா மையமாக இருக்கும் பிரேசிலில் தினசரி கொரோனா பாதிப்பு (70 ஆயிரத்துக்குள்) சற்று வரும் நிலையில், அர்ஜெண்டினா, கொலம்பியா ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது.
குறிப்பாக கால்பந்திற்கு பெயர் பெற்ற அர்ஜெண்டினா கடந்த 48 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 80,287 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,105 பேர் பலியாகியுள்ளனர். எனினும் ஆறுதலை அளிக்கும் விதமாக தினசரி பாதிப்பை விட குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அர்ஜெண்டினாவில்...
பாதிப்பு : 39,207
பலி : 558
குணம் : 33,369