world

img

தீக்கதிர் உலக செய்திகள்

என்விடியாவுக்குப் போட்டியாக களமிறங்கும் சீனாவின் ஹூவாவே

அமெரிக்காவின் என்விடியா அதிநவீன சிப்களை சீனாவிற்கு விற்பனை செய்யக்கூடாது என டிரம்ப் தடை விதித்துள்ளார். இந்நிலையில் எச்200 என்ற இரண்டாம் தர சிப்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்தது என்விடியா. பிறகு டிரம்ப் வர்த்தகப் போர் துவங்கி அந்தச் சிப்களுக்கும் தடை விதித்தார். இதனால் தனது தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனாவின் ஹூவாவே மற்றும் கேம்ப்ரிகான்  நிறுவனங்களின் சிப்களை மேம்படுத்தி  தங்களது அதிகாரப்பூர்வ கொள்முதல் பட்டியலில் சேர்த்துள்ளது சீன அரசு.  

எண்ணெய்க் கப்பலை கடத்திய அமெரிக்கா

வெனிசுலா அருகே எண்ணெய் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்ததாக டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலா கடற்கரைக்கு அருகே அக்கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போது அமெரிக்க ராணுவம் இடைமறித்து வலுக்கட்டாயமாக மிரட்டி கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இதுவரை கைப்பற்றப்பட்ட திலேயே இக்கப்பல் தான் மிகப்பெரிய கப்பல் என டிரம்ப் கூறியுள்ளார். கப்பலில் கச்சா எண்ணெய் இருக்கும் பட்சத்தில் அமெரிக்கா கொள்ளையடிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல் எந்த நாட்டுக்குச் சொந்தமானது என தெரிவிக்கவில்லை.

 வரி விதிப்பை வைத்து எதையும் சாதிப்பேன்  : டிரம்ப்  

கம்போடியா வைத்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரர் காயமடைந்ததாகக் கூறி சமீபத்தில் ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தை நவம்பரில் ரத்து செய்வதாக தாய்லாந்து அறிவித்தது. இதனை தொடர்ந்து டிச.8 அன்று மீண்டும் இரு நாடுகளுக்கும் மோதல் வெடித்தது. இந்நிலையில் டிரம்ப்பிடம்  கம்போடி யா-தாய்லாந்து மோதல் குறித்து கேட்டபோது, ‘ஒருபோன் அழைப்பில் அப்பிரச்சனையை தீர்த்து விடுவேன்.  மெரிக்காவிடம் உள்ள வர்த்தகம் வரிவிதிப்பு பலத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் சாதிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

உலகளவில் அதிகரித்த வனவிலங்கு கடத்தல்

 உலகளவில் வனவிலங்குகளின் கடத்தல் அதிகரித்துள்ளது என இண்டர்போல் அமைப்பு தெரி வித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் வளர்ப்புப் பிராணிகளாக விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்ட 30,000  விலங்குகளைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் இது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத  அதிக எண்ணிக்கை எனவும் தெரிவித்துள்ளது. வனவிலங்குகள் தொடர்பான  குற்றங்கள் இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தொழிலாக வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நிதி உதவி : ஐ.நா வேண்டுகோள்

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மிக முக்கியமான உதவிகளை வழங்கக் கோரி சர்வதேச நன்கொடையாளர்களுக்கு ஐ.நா அவை அழைப்பு விடுத்துள்ளது.  இலங்கையில் உள்ள ஐ.நா.வின் தூதர் மார்க் ஆண்ட்ரே  285 கோடி ரூபாய் வரை திரட்டும் வகையிலான அவசர நிதித் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தத் தொகை, புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.