world

img

போர்களால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் குழந்தைகள் கற்பனை செய்ய முடியாத கொடுமைகளை எதிர்கொள்கின்றன : ஐ.நா

போர்களால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் குழந்தைகள் கற்பனை செய்ய முடியாத கொடுமைகளை எதிர்கொள்கின்றன : ஐ.நா

நியூயார்க், ஆக. 25- போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் குழந்தைகள் கற்பனை செய்ய முடியாத அள வுக்கு  கொடுமைகளையும் பாதிப்புகளையும் எதிர் கொள்வதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.    2024 ஆம் ஆண்டு இறுதியில் ஐ.நா குழந்தை கள் நிதியம் வெளியிட்டிருந்த ஆய்வு அறிக்கையா னது, போர்களின் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கான வன்முறைகள் குழந்தைகளின் மீது அதிகரித்துள்ளன என அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருந்தது. குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான போர்கள் நடந்து வரும் சூழலில் உலகளவில் ஆறில் ஒரு குழந்தை போர் நடக்கும் நாடுகளில் வாழ்கிறார்கள் என குறிப்பிட்டது.   தற்போது காசாவில் அதிகப்படியான குழந்தை கள் பட்டினிப் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்தான விவாதத்தை மீண்டும் துவங்கும் வகையில் அந்த அறிக்கையை குறிப்பிட்டு தனது கவலையை ஐ.நா தெரி யப்படுத்தியுள்ளது.  குழந்தைகள் போரைத் துவங்குவதில்லை, ஆனால் போரில் அதிகபட்சமான விலையை அவர் களே கொடுக்கின்றனர். குண்டுகள் வீசி குழந்தை கள் படுகொலை செய்யப்படுகிறார்கள், தாக்கு தல்களில் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். போர்களில் வளர்ந்த நபர்கள் சந்திக்கும் பாதிப்பு களை விட அதிகளவிலான பாதிப்புகள் குழந்தை களுக்கே ஏற்படுகிறது. மேலும் குழந்தைகள் மிக சிறு வயதிலேயே தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் இழக்கிறார்கள். சூடான் போன்ற உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் குழந்தைகள் கடத்தப்பட்டு கட்டாயமாக ஆயுதக்குழுக்களில் சேர்க்கப்படு கிறார்கள், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படு கிறார்கள்.குழந்தைகளின் கண் முன்னே அவர்களின் பள்ளிகளும் மருத்துவமனைகளும் அழிக்கப்படுகின்றன.  ஹைட்டி, மியான்மர், பாலஸ்தீனம், சூடான், உக்ரைன்,ரஷ்யா எனப் பல நாடுகளில் நடை பெறும் போர்கள்  ஒரு தலைமுறையை சேர்ந்த குழந்தைகளையும் அவர்களின் எதிர் காலத்தை யும் அழித்து வருகிறது. இது போன்ற கட்டுப் பாடற்ற போர்களால் குழந்தைகளும் அவர்களின் எதிர்காலமும் அழிந்து போவதற்கு நாம் அனு மதிக்கக் கூடாது என ஐ.நா அவை அழைப்பு விடுத்துள்ளது. உலகளவில் ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை அதாவது 47.3 கோடிக்கும் அதிக மானகுழந்தைகள் தற்போது போர்களால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். 1990 களில் போர்களால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும்  குழந்தைகளின் எண்ணிக்கை 10 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட 19 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில்  4.72 கோடி குழந்தைகள் போர்கள் மற்றும் வன்முறை கார ணமாக தங்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெய ர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.