states

img

கேரளம்: மாற்றுப்பாலின மாணவர்களுக்கான விடுதி திறப்பு

கேரளத்தில் முதல் முறையாக மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் மாற்றுப்பாலின மாணவர்களுக்கான விடுதி திறக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் மாற்றுப்பாலின மாணவர்களுக்கான பிரத்யேக விடுதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த விடுதியை அம்மாநில உயர்கல்வித்துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து திறந்து வைத்தார். இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர்.பிந்து, “மாநிலத்தில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜேஆர்எஃப்) தேர்ச்சி பெறும் மாற்றுப்பாலின மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தால் தொடங்கப்பட்ட விடுதித் திட்டத்தை நான் பாராட்டுகிறேன். விளிம்புநிலை சமூகத்தினர், வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களுக்கு சமூக ஆதரவை நாம் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய விடுதி வசதி மாற்றுப்பாலின மாணவர்களை உயர்கல்விக்கு அதிக அளவில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.