சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை விவாதிக்க மேயர் ஆர்.பிரியா மறுத்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் செவ்வாயன்று (ஆக.26) மேயர் ஆர். பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்ற குழு தலைவர் ஆர். ஜெயராமன், தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்பினார்.
அதற்கு மேயர், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், இது குறித்து விவாதிக்க முடியாது என்றும் கூறினார். இதனை ஏற்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.