அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தப்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி நாளை (ஆக.27) முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கனவே, 25% வரி விதித்திருந்த நிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முடிவை கண்டித்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேலும் 25% வரியை புதிதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம், இந்திய பொருட்களுக்கு மொத்தமாக 50% வரி அமலாகும். முக்கிய ஏற்றுமதித் துறைகளான நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால், தோல், ரசாயனங்கள் மற்றும் வாகன பாகங்கள் போன்றவை இந்த வரி உயர்வால் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.