world

img

கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமையை ரத்து செய்க... இந்தியா, தென்ஆப்பிரிக்கா கோரிக்கை அமெரிக்கா எதிர்ப்பு

நியூயார்க்:
கொரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உலக வர்த்தக மையத்தில் இந்தியா மற்றும்தென் ஆப்பிரிக்கா  விண்ணப்பித்துள் ளன. இதனை ஏற்கக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடனுக்கு நான்கு முதன்மை குடியரசு கட்சிசெனட்டர்கள் நிர்ப்பந்தம் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிபர் ஜோ பைடனுக்கு செனட்டர்கள் எழுதிய கடிதத்தில்,  “கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் கண்டுபிடிப்பு களுக்குக் காப்புரிமை வழங்க வேண்டாம் எனவும், அதன்மூலம் அவற்றின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஊக்குவிக்கலாம் எனவும் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் உலக வர்த்தக மையத்திடம் கோரிக்கை வைத்துள்ளன. அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை ரத்து செய்தால், அமெரிக்க நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் திடீரென்று அதிகரித்துவிடுவார்கள்.

அமெரிக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை ரத்து செய்வதன் மூலம் தாங்கள் பயனடையலாம் என்று பிற நாடுகள் நம்புகின்றன. ஆனால் காப்புரிமையை ரத்து செய்வதன் மூலம் கண்டுபிடிப்புகளுக்கான உத்வேகம் மட்டுப்படும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகள் நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது” என்று மருந்து வியாபாரிகளின் நலனை முன்னிறுத்தி இவ்வாறு தெரிவித்துள்ளனர்.  அமெரிக்கக் கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை ரத்து செய்வதை ஒப்புக்கொள்வது கொரோனா பரவலைத் தடுப்பதில் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கே எதிரானதாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளக் கூடாது என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.