நாடு முழுவதும் பல்வேறு விதமாக பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் நிறுவனம் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட முக அடையாளம் காணும் சேவையை கைவிடப் போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கலிஃபோர்னியா – சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என கடந்த வாரம் மாற்றியது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பல நாடுகள் வெளியிடாத நிலையில் அதை கைவிடுவதாகவும் 100 கோடி பேரின் முக அடையாளங்களை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக்கின் கீழ் பல நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. இன்னும் பல நிறுவனங்கள் அதன் கீழ் வரவிருக்கின்றன. அப்படி இருக்கும்போது அது ஃபேஸ்புக்காக, சமூக வலைதள நிறுவனமாக மட்டுமே அறியப்படுவது சரியல்ல என்று இந்தப் பெயரை வைத்துள்ளார் மார்க். சமூக வலைதள விஷயங்களில் ஏற்படும் சர்ச்சைகள் மொத்த நிறுவனத்தையும் பாதித்து வருகிறது. அதனை சரி செய்யும் விதமாக மட்டுமே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மெட்டா என்னும் பெயர் அவரது கனவுத்திட்டமான மெட்டாவெர்ஸிலிருந்து வந்தது. கடந்த சில வருடங்களாகவே மெட்டாவெர்ஸ் உருவாகும் முயற்சியில் ஃபேஸ்புக் அதீத ஈடுபாடு காட்டி வருகிறது.