வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும்
வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கான தேதி ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் அறிவிக்கப்படும் என அந்நாட்டின் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக வெடித்த போராட் ராட்டங்களின் முதலாமாண்டு நிறைவையொட்டி அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும், தேர்தல் 2026 பிப்ரவரி மாதம் நடைபெறலாம் எனவும் கூறப்படு கிறது. 2025 க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதை இடைகால அரசு பரிசீலிக்கவில்லை என குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
டெஸ்லாவுக்காக குறைக்கடத்திகளைஉற்பத்தி செய்யும் சாம்சங்
டெஸ்லா நிறுவனத்துக்காக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை ஏஐ-6 சிப்பை தயாரிக்கும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். ஏஐ-6 சிப்பானது மனித ரோபோக்கள் மற்றும் தானியங்கி கார்க ளை இயக்குவதற்கான செயற்கை நுண்ணறிவு பணிகளை மேற்கொள்ளும் வகையிலான மேம்பட்ட சக்தி வாய்ந்த சிப் ஆகும். அமெரிக்கா வின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் இந்த உற்பத்தி துவங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வடகொரியா-ரஷ்யா நேரடி விமான போக்குவரத்து
வடகொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் ஒத்து ழைப்பின் வெளிப்பாடாக தற்போது நேரடி விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இரு நாடுகளின் தலைநகருக்கு இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவிற்கு ராணுவ ரீதியிலான உதவிகளை வடகொரியா செய்து வருகிறது. அதே போல ரஷ்யாவும் பல்வேறு வகையிலான தொழில்நுட்ப பொரு ளாதார உதவிகளை வழங்கி வருவது குறிப்பி டத்தக்கது.
சீனாவில் நிலச்சரிவு: நான்கு பேர் பலி
சீனாவின் ஹீபேய் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் காணாமல் போயுள் ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரி வில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் ஈடு பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கின் புறநகர்ப் பகுதியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளத்தை சந்தித்துள்ளன.
இஸ்ரேல் தொடர்பு கப்பல்கள் : ஹவுதிகள் மீண்டும் எச்சரிக்கை
இஸ்ரேல் துறைமுகங்களுடன் தொடர்பு வைத்துள்ள நிறுவனங்களுக்குச் சொந்த மான அனைத்து கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காசாவில் இஸ்ரேல் செய்து வரும் இனப்படுகொலையை நிறுத்தும் வரை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள நாடுகளின் கப்பல் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: பொருளாதார உறுதித்தன்மைக்கு அச்சுறுத்தல்
பிரஸல்ஸ், ஜூலை 28- ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார உறுதித்தன்மையையும் வேலைவாய்ப்பு பாதுகாப்பையும் பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மூத்த எம்.பியான பெர்ண்ட் லாங்கே கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் உட்பட பல நாடுகளின் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வர்த்தகப் போரை துவங்கியது. இதன் பிறகு அமெரிக்கவுடன் வர்த் தகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அந்நாடு களை டிரம்ப் மிரட்டி வந்தார். அதன்படி பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தி வருகின்றன.சில நாடுகளுடன் இன்னும் இறுதியாக வில்லை என்பதால் ஆகஸ்ட் 1 வரை பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் கொடுத்துள்ளார். தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் மட்டிரும் டிரம்ப்பும் நடத்திய சந்திப்பிற்கு பிறகு வர்த்தக ஒப்பந்தம் எட்டப் பட்டதாக அறிவித்தனர். இந்த ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்கள் மீது 15 சதவீதம் வரி இருக்கும் என டிரம்ப் அறி வித்துள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெ ரிக்காவிடம் இருந்து 750 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிசக்திகளை வாங்கவும், அமெரிக்காவில் அந்த நாடுகள் சுமார் 600 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்யவும் வேண்டும் என ஒப்பந் தத்தில் கையெழுத்தாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிபொருள் மிக அவசியமானதாகும். குளிர் காலத்தில் இதன் தேவை மிக அதிகமாக உள்ளது. இந்நாடுகளுக்கு ரஷ்யாவே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கும் பிரதான நாடாக இருந்து வந்தது. ஆனால் உக்ரைன் உடனான போர் துவங்கிய பிறகு ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் எரி பொருள் வாங்குவது பெருமளவு நின்று விட்டது. இந்நிலையில் அந்நாடுகள் அமெரிக்காவிடமிருந்து எரிபொருள் வாங்கி வருகின்றன. அது அதிக விலையில் விற்கப்படுவதால் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் எரி பொருள் விலைகள் உயர்ந்துள்ளன. ஏற்கனவே பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு இது புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவரு மான பெர்ண்ட் லாங்கே அமெரிக்காவின் ஒப்பந்தம் “திருப்தியற்றது” மற்றும் “மோசமாக சமநிலையற்றது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.ஏற்கனவே நடைமுறையில் இருந்த வரியின் சராசரி அளவை விட தற்போதைய ஒப்பந்த அடிப்படையிலான வரி விகிதம் நான்கு மடங்கு அதிகம் என்றும், அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கப் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி விதிக்க (வரிகளே விதிக்காமல்) கூட ஒப்புக்கொள் ளும். “இது ஒரு சார்பு கொண்ட ஒப்பந்தம். வெளிப்படையா கவே, ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார். “ஒட்டுமொத்தமாக, இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றி யத்தின் பொருளாதார வளர்ச்சியை பலவீனப்படுத்தவும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கவும் செய்யும்” என்று அவர் கூறியுள்ளார்.