ரியாத்
2020-ஆம் ஆண்டு முழுவதும் உலகை தனது உள்ளங்கையில் வைத்து ஆட்டிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் நிறைய நாடுகளில் உருமாறி 2-ஆம் கட்ட சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் மீண்டும் ஊரடங்கை செயல்படுத்தி வரும் நிலையில், அரேபிய நாடான சவுதியில் கொரோனா பரவலை மீண்டும் தடுக்க இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடி ஆதரவு பிறப்பித்துள்ளது. மேலும் சவுதி குடிமக்கள், தூதர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியல் :
ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், எகிப்து, லெபனான், பாகிஸ்தான், அர்ஜெண்டினா, பிரேசில், இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், போர்ச்சுகல், சுவீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாட்டின் பயணிகள் சவுதி அரேபியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.