world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமேசான் பாதுகாப்புக்காக போராடியவர்கள் படுகொலை  

அமேசான் காடுகள் பாதுகாப்புக்காக போராடிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வ லர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  லண்டனை சேர்ந்த குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் 2012-24 வரையிலான 12 ஆண்டுகளில் 2253 சுற்றுசூழல் ஆர்வலர்கள் மர்மமாக கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக பிரேசில் நாட்டை சேர்ந்த 365 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெ.வில் துப்பாக்கிச் சூடு : காவல் அதிகாரிகள் பலி  

அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ஒவ்வொரு நாளும் பலதரப்பு மக்கள் பலியாகி வரு கின்றனர். சமீபத்தில் டிரம்ப்பின் நண்பரும் துப்பாக்கி கலாச்சார ஆதரவாளருமான சார்லி துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது பென்சில்வேனியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள் ளது. அதில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இணைய சேவை துண்டிப்பு : ஆப்கன் அரசு நடவடிக்கை  

ஆப்கானிஸ்தானில் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஒழுக்கக் கேட்டைத் தவிர்க்கும் முயற்சி எனக் கூறி இந்த தடை விதித்ததாகக் கூறப்பட்டுள்ளது. செல்போன் வாயிலான இணைய சேவைகள் இயக்கத்தில் உள்ளதா கவும் அதே நேரத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வைஃபை இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ரஷ்யாவில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

  ரஷ்யாவின் கம்சத்கா பகுதியில் 128 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பெரும் அலைகள் ஏற்பட வாய்ப்புள்ள தாக அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் தொடர் நிலநடுக்கங்களும்/அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்க முடிவு  

2035 க்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை 70 சதவீதம் வரை குறைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கடந்த 2005 இல் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்பட்ட அளவை விட 62 முதல் 70 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அறிவியல் ரீதியிலான, சாத்தியக்கூறுகள் நிறைந்த, ஏற்கனவே சாத்தியமான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.