tamilnadu

img

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் ‘குற்றமற்றவர்’ என மோடி அரசு சர்டிபிகேட் பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.46,000 கோடியை அள்ளிய அதானி!

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் ‘குற்றமற்றவர்’ என மோடி அரசு சர்டிபிகேட் பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.46,000 கோடியை அள்ளிய அதானி!

புதுதில்லி, செப். 19 - அதானி குழுமம் மீதான ஹிண்டன் பர்க் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ‘செபி’ அறிவித்த பின்னணியில், ஒரே  நாளில் ரூ. 46 ஆயிரம் கோடி ரூபாயை அதானி ‘லாபமாக’ அள்ளியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் ரிசர்ச், கடந்த 2023ஆம் ஆண்டு, 106  பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தை மிகப்பெரிய மோசடி யில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டியது. குறிப்பாக, மொரீஷியஸ், கரீபியன் தீவுகளில் போலியான நிறுவனங் களைத் தொடங்கி, அவற்றின் மூலம் போலியாக தமது பங்குச்சந்தை மதிப்பை உயர்த்திக் காட்டி, பங்குச்  சந்தை முதலீட்டாளர்களை ஏமாற்றிய தாகவும், அத்துடன் வரி ஏய்ப்பிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தது. இதுதொடர்பாக அதானி குழுமத்திற்கு 88 கேள்விகளையும் ஹிண்டன்பர்க் நிறுவனம் எழுப்பியது.  இது பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதானி குழும பங்குகளின் விலைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.  இந்தப் பின்னணியில், அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து 2 மாதத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-க்கு  உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமை யில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை யும் உச்சநீதிமன்றம் நியமித்தது. ஆனால், ‘செபி’ அமைப்பு, 2 மாத  கால அவகாசத்தை, 2 மாதம்... 3 மாதம்... 6 மாதம் என்று இழுத்தடித்து, ஒருவழி யாக 2 ஆண்டுகள் கழித்து விசார ணை முடிவை தற்போது வெளி யிட்டுள்ளது.  அதில் தான், உள்வர்த்தகம், சந்தை  மோசடி, பொது பங்குதாரர் விதிமுறை களை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி யதில் அவை ஆதாரமற்றவை என தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.  மேலும், அடிகார்ப் எண்டர்பி ரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறு வனம், பல்வேறு அதானி குழும நிறு வனங்களிடமிருந்து பொதுப் பட்டி யலில் உள்ள அதானி பவர் நிறு வனத்திற்கு நிதியைத் திசை திருப்ப பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை; அடிகார்ப், மைல்ஸ்டோன் டிரேட்லிங்க்ஸ் மற்றும் ரெஹ்வார் இன்ப்ராஸ்ட்ரக்சர் இடையேயான கூட்டு நிறுவனங்களுடனான பரி வர்த்தனைகள் உள்ளிட்டவை, செபி சட்டம், பட்டியலிடும் ஒப்பந்தம் உள்ளிட்ட எந்த விதிமுறைகளையும் மீற வில்லை. முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தக்கூடிய எந்த மீறல்களும் கண்டறியப்படவில்லை.  இதனால், அதானி நிறுவனங்கள் அல்லது நிர்வாகிகளுக்கு அபராதம் விதிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ எந்த அடிப்படையும் இல்லை. ஒட்டு மொத்தமாக அதானி குழும நிறு வனங்கள் மீது எந்த தவறுமே இல்லை என்று செபி அறிவித்துள்ளது.