மாதர் சங்க மாநில மாநாடு : எழுச்சிமிகு துவக்கம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17 ஆவது மாநில மாநாடு குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செப்டம்பர் 24 அன்று எழுச்சிகரமாகத் துவங்கியது.செப்டம்பர் 25 அன்று பிரதிநிதிகளின் விண்ணதிரும் முழக்கங்களுடன் மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஆர்.மல்லிகா சங்கக் கொடியேற்றினார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகளின் நினைவுச்சுடர்களை தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், மாதர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.