tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

எம்.எஸ். சுவாமிநாதனை இந்தியா மறக்காது: முதலமைச்சர்!

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி தரமணி எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடை பெற்றது.  இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசு கையில், “வயிறு நிரம்பினால் மட்டும் போதாது, நாம் சாப்பிடுவது மிகவும் சத்தான உணவாகவும் இருக்க வேண்டும் என்றவர் எம்.எஸ். சுவாமிநாதன். இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என உலகமே அழைத்தாலும், உணவு பாதுகாப்பின் காவலர் அவர்” என்றார். மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி நடத்திய எம்.எஸ். சுவாமிநாதன் பெயரை இந்தியா மறக்காது என்றும்,  பசியால் நடக்கும் இறப்புகள் குறைந்துள்ளதற்கு அவரே காரணம் என்றும் முதலமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தா.மோ. அன்பரசன், ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மரு. சவுமியா சுவாமிநாதன், தலைமை அஞ்சல் துறைத்  தலைவர் மரியம்மா தாமஸ், தி இந்து குழுமத்தின் இயக்குநர்  

ராம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சீமானின் வாய்த் துடுக்குப் பேச்சு; திமுக, அதிமுக கண்டனம்

சென்னை: அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து நாம் தமிழர்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அநாக ரிகமான முறையில் பேசியது கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரி வித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார், “இந்த விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. சீமான்  இத்துடன் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இவரை விடக்  கன்னா பின்னா என பேசிவிட்டு சிரிப்பதற்கு எங்களுக்கும் தெரியும்” என்று எச்சரித்தார். திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். போன்றவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரந்தாழ்த்து வாய்த்துடுக்காகப் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம் என  கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனிதநேயத்தை சிதைப்பதா? ப. சிதம்பரம் கண்டனம்

சென்னை: வக்பு திருத்தச் சட்டம் மூலம் மனிதநே யத்தை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என முன் னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றச்சாட்டு வைத்து உள்ளார். மனிதநேயம் சிதைக்கப்படும்போது மனிதநேயத்துக்கு  ஆதரவாக நாம் குரல் கொடுக்க வேண்டும். பாலஸ் தீனத்தை அங்கீகரிப்பதில் இந்தியா தற்போது தடம் புரண் டுள்ளது. வக்பு திருத்தச் சட்டத்தை எப்போதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என அரசு உறுதியளித்துள்ளது.

கல்வியிற் சிறந்த தமிழ்நாடு விளம்பரத்திற்கானது அல்ல!

சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி விளம்பரத்துக்காக நடத்தப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகள் இதுபோல  வளர வேண்டும் என்பதை உலகிற்கு காட்டவே நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 727 பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை: கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் கள், உதவியாளர்கள், வனக் காவலர், வனக் காப்பாளர்கள் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி  குரூப் 4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது. 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் தேர்வை எழுதினர். இந்த  தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களில் வெளியாகும் என  டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் முன்னர் தெரிவித் திருந்தார். இந்நிலையில், குரூப் 4 பணியிடங்களின்  எண்ணிக்கையை அதிகரித்து டிஎன்பிஎஸ்சி  அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. குரூப் 4 தேர்வின் மூலமாக  3,935 பணியிடங்கள் நிரப்பப்படவிருந்த நிலையில், 727 பணி யிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால்  பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரிக் கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதிமுக  மோசமான  தோல்வியை சந்திக்கும்

சென்னை: 2021 தேர்தலை விட 2026 தேர்தலில் அதிமுக மோச மான தோல்வியை சந்திக் கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தின கரன் உறுதிபட தெரிவித் துள்ளார்.  தன் கையில் கட்சி இருந்தால் போதும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார் எனவும் விமர்சித்துள்ளார்.

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின்  அளவு 9,500 கன அடியி லிருந்து 12,500 ஆக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக 12,000 கனஅடி, கிழக்கு, மேற்கு  கால்வாய் வழியாக 500  கனஅடி நீரும் வெளி யேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை - ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்

 சென்னை: சென்னை - இராமேஸ்வ ரம் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு  செய்துள்ளது. எழும்பூர்  அல்லது தாம்பரத்தில்  இருந்து இராமேஸ்வரத் துக்கு பகல் நேரத்தில் இந்த ரயிலை இயக்க தீர்மானி க்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இராமேஸ் வரம் சென்று சென்னை திரும்பும் வகையில் ரயில் பாதையை திட்டமிடவும் முடிவு செய்துள்ளது.

அக்.3 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கட லோரப் பகுதிகளுக்கு அப் பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய  மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா  – சத்தீஸ்கர் பகுதிகளில் ஞாயிறன்று ஆழ்ந்த காற் றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 3-ஆம் தேதி வரை தமிழ கத்தில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மித மான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.