tamilnadu

img

சர்க்கரை ஆலைகளில் ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்கிறது

சர்க்கரை ஆலைகளில் ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்கிறது

மேலாண் இயக்குநர் தகவல் தஞ்சாவூர், செப்.26 -  பொதுத் துறை சர்க்கரை ஆலை களில் ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்வதால் தான் தொடர்ந்து இயக்க முடிகிறது என தமிழ்நாடு சர்க்கரைக் கழகத் தலைவரும், மேலாண் இயக்கு நருமான டி. அன்பழகன் தெரிவித்தார்.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிய ரகத்தில், குருங்குளம் அறிஞர் அண்ணா  சர்க்கரை ஆலை சார்பில், வெள்ளிக் கிழமை நடைபெற்ற, தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் 50 ஆவது பேர வைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசிய தாவது: ஒன்றிய அரசு கரும்புக்கு டன்னுக்கு  நியாயமான மற்றும் லாபகரமான விலையாக ரூ.3,151 அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தி  டன்னுக்கு ரூ.349 அறிவித்து வழங்கி யுள்ளது. குறுகிய கால பயிர் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு செல்வதைத் தடுத்து, கரும்பு சாகுபடியை ஊக்கப் படுவதற்காக இத்தொகை வழங்கப் படுகிறது. கரும்புக்கு டன்னுக்கு ரூ. 3,500  வழங்கப்பட்டாலும், வெளிச் சந்தையில்  சர்க்கரை விலை டன்னுக்கு ரூ.4,023 மட்டுமே விற்பனையாகிறது. ஒரு டன் சர்க்கரை உற்பத்தி செய்ய ரூ.8,051 செலவாகிறது. அதாவது ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய ரூ.80.51 செலவிடும் நிலையில், வெளிச் சந்தை யில் ரூ. 40.23 மட்டுமே விலை கிடைப்ப தால், ஏறத்தாழ ரூ. 40 இழப்பு ஏற்படு கிறது. இந்த ரூ.40 இழப்பை அரசு ஈடு  செய்வதால்தான், ஆலைகளைத் தொடர்ந்து இயக்க முடிகிறது.  இதன்மூலம் விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்படுகிறது. திறமை யாக இயக்கப்படும் தனியார் சர்க்கரை ஆலைகளே, இந்த இழப்பை  ஈடு செய்ய முடியாமல், தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வந்ததால் மூடப்பட்டன. தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கூடுதலாக தேக்கமடைந்துள்ள மொலா சஸ் அளவீடு செய்யப்பட்டு, கணக்கில்  சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, விரை வில் விற்பனை செய்து, அத்தொகை ஆலைக்கு சேர்க்கப்படும். இடுபொருட்களின் விலை உயர்ந்து  விட்டதால், விவசாயிகளுக்கு கரும்புக் கான விலை உயர்த்தப்பட்டுள்ளது. என்றாலும், இந்த விலை கட்டுப்படியாக வில்லை என்றும், டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுப் பது நியாயமானது. ஆனால், விலையை  உயர்த்தி வழங்கும்போது, சர்க்கரை ஆலையில் கொள்முதல் செலவு அதிக மாவதன் காரணமாக உற்பத்திச் செலவு  அதிகமாகிறது. இதுவே, இழப்பைச் சந்திப்பதற்கு காரணம் தவிர, தொழிலா ளர்களின் திறன் குறைவோ, அலுவலர் களின் செயல்பாடுகளோ காரணமல்ல. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், தமிழக ஆளு நரின் பிரதிநிதி பி.பாலமுருகன், பொது  மேலாளர் வி.மாலதி, தமிழ்நாடு கூட்டு றவு சர்க்கரை இணைய மேலாண் இயக்குநர் டி.ரமணிதேவி, குருங்குளம்  அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி எஸ்.ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.