மராத்வாடாவில் 27 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் கனமழையால் நாசம்
நிவாரணம் வழங்காமல் விவசாயிகளை வஞ்சிக்கும் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு
மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா (அவுரங்க பாத்) மற்றும் தேஷ் (புனே) பிராந்தியங்களில் கடந்த 4 மாதங்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் அந்த பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்கள் மிக மோச மான பாதிப்பை எதிர்கொண்டுள் ளன. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருவதால், அந்த மாவட்டங்களில் சோயாபீன்ஸ், பருத்தி, உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதே போல அறுவடைக்குத் தயா ராக இருந்த வாழைகள் மற்றும் கரும்புகளும் நீரில் மூழ்கியும், வேரோடு வேராகச் சாய்ந்துள்ளன. மேலும் வயல்களில் இருந்த மண்ணையும் வெள்ளம் அரித்துச் சென்றுள்ளது. அதனால் மாற்றுப் பயிருக்கு ஏற்பாடு செய்ய முடி யாத அளவிற்கு மண் அமைப்பு சேதமடைந்துள்ளது. சோலாப்பூர் கனமழையால் மராத்வாடா பிராந்தியத்தின் சத்ரபதி சம்பாஜி நகர் மற்றும் ஜல்னா மாவட்டத்தில் தலா 1 லட்சம் ஹெக்டேரும், தாரா ஷிவ் மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஹெக்டேரும், லத்தூர் மாவட்டத் தில் 3 லட்சம் ஹெக்டேரும், பர்பானி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஹெக்டே ரும், ஹிங்கோலி மாவட்டத்தில் 3 லட்சம் ஹெக்டேரும், பீட் மற்றும் நான்டெட் மாவட்டங்களில் முறை யே 4 லட்சம் மற்றும் 6.50 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் என மொத்தம் 27 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் நாசமாகி யுள்ளன. அதே போல தேஷ் பிராந்தி யத்தின் முக்கிய விவசாய பகுதி யான சோலாப்பூர் மாவட்டத்தின் 6 தாலுகாக்களில் 1 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளின் பயிர் கள் நாசமாகியுள்ளன. புல்தானா மாவட்டத்தில் சோயாபீன்ஸ் பயிர் களை கண்ணில் காணாதபடி வெள்ளநீர் அரித்துச் சென்று விட்டது என விவசாயிகள் கூறி யுள்ளனர். மேகவெடிப்புக்கு நிகரான இந்த கனமழையால் விவசாயிகள் இதுவரை சந்தித்தி ராத மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். ஆனால் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு மராத்வாடா மற்றும் சோலாப்பூ ருக்கு மழைக்கால பாதிப்புக்கான நிவாரணம் தொடர்பான அறி விப்பை கூட வெளியிடாமல் விவசா யிகளை வஞ்சித்து வருகின்றனர்.