கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரளம் அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் உள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, முன்னேற்ற அறிக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கேரளாவில் தீவிர வறுமையை ஒழிக்க முயற்சிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. நவம்பர் 1ஆம் தேதி கேரளம் தீவிர வறுமை இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்க சதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தேர்தல் ஆணையம் நம்மிடமே பிரமாண பத்திரம் கேட்கிறது.
யூடியூபர் துருவ் ரதி
6 வருடங்களாக லடாக்கில் அமைதி முறையில் நடக்கும் போராட்டத்தை பொருட்படுத்தவில்லை. ஆனால் ஒன்றிரண்டு பேர் வன்முறையை கையில் எடுத்ததும், போராட்டத்தை வெளிநாடுகள் ஊக்குவிக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள். மேலும் மொத்த போராட்ட இயக்கத்தை குறித்தும் அவதூறு பேசுகிறார்கள். இதுதான் ஒன்றிய பாஜக அரசின் உத்தி.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங்
ஜிஎஸ்டி குறைப்பு பற்றி செப்., 21 அன்று மாலை 5 மணிக்கு மக்களிடம் பேசிய போது, மோடி கடுமையாக மோடியையே திட்டிக் கொண்டிருந்தார். எப்படி 127 லட்சம் கோடி ரூபாயை 8 வருடங்களாக மக்களிடமிருந்து திருடினாய்? என கோபமாக அவரையே கேள்வி கேட்டுக்கொண்டார் மோடி.