states

தீக்கதிர் விரைவு செய்திகள்

காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிக்க தனி இணையதளம் தொடங்க வேண்டும் என ஒன்றிய  அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“ஜம்மு -காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்குப் பதில், ஒன்றிய அரசின் குறு கிய பார்வை ஜம்மு மற்றும் லடாக்கை வன்முறை நெருப்பில் தள்ளியுள்ளது. இந்த நெருக்கடி பாஜக அரசு உருவாக்கியது. ஆனால், தற்போது பாஜக மக்களின் கோரிக்கைகளை நியாயமற்ற முறையில் புறக்கணிக்க முயல்கிறது” என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் வியாழக் கிழமை அன்று நடைபெற்ற விழாவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் வழங்கல், மின்சாரம், சாலை மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ரூ.1,22,100 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.