states

img

டார்ஜிலிங்கும்... 200 மி.மீ., கனமழையும்...

டார்ஜிலிங்கும்... 200 மி.மீ., கனமழையும்...

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப்பகுதி மலை வாசஸ்தல பிரதேசமான டார்ஜிலிங்கில் சனிக்கிழமை அன்று இரவு முழுவதும் இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. ஒரே இரவில் 200 மி.மீ.,க்கும் அதிகமான அளவில் கனமழை பெய்ததால் டார்ஜிலிங் நகரம் மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்கள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன. மலைச்சரிவில் இருந்த வீடுகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன. முக்கிய சாலைகள் சேதமடைந்தன. இதனால் பல மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. உள்ளூர் நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்களால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக டார்ஜிலிங் துணைப்பிரிவு அதிகாரி (SDO) ரிச்சர்ட் லெப்சா தெரிவித்துள்ளார். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மிரிக் ஏரிப் பகுதியில் மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.