அமெரிக்க எண்ணெய் முதலாளிகளின் லாபத்திற்காக சுற்றுச்சூழலை அழிக்கும் வகையில் கொள்கைகளை மாற்றும் டிரம்ப்
வாஷிங்டன்,செப்.19- அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டா வது முறை பொறுப்பேற்றுள்ள டிரம்ப் தனது தேர்தலுக்காக நிதி கொடுத்த எண்ணெய் முதலாளிகளின் லாபத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்காவின் சுற்றுச்சூழல் கொள்கைகளில் கடந்த காலத்தில் இல்லாத வகையிலான மாற்றங்களை செய்து வருகிறார். சுற்றுச்சூழலை அதிகளவு பாதிக்கா மல் இருப்பதற்காக கடந்த காலத்தில் எண்ணெய் நிறுவனங்கள் அதிக கச்சா எண்ணெய்யை எடுத்து விற்பனை செய்வதை கட்டுக்குள் வைத்திருப்ப தற்காக உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு நடவடிக்கை களை நீக்கி வருகிறார் டிரம்ப். அவர் பதவியேற்ற எட்டு மாதங்களுக்குள் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். இவை மட்டுமல்ல பசுமை இல்ல வாயுக்களை ஒழுங்குபடுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (EPA) அறிவியல் பூர்வமான அடிப்படை விதிகளை நீக்க முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார். கால நிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வருவதற்காக புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு பதிலாக ஏற்கெனவே செய்து வந்த முதலீடுகளை குறைத்தார். இவற்றுடன் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்காக புதைபடிவ எரி பொருள் மின் உற்பத்தி நிலையங்க ளுக்காக விதிக்கப்பட்டிருந்த மாசுக் கட்டுப்பாடு தொடர்பான வரம்புகளை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அத்துடன் அந்நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை “அமெரிக்க வர லாற்றிலேயே மிகப்பெரிய ஒழுங்கு முறை நீக்க நடவடிக்கையை” அறி முகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் கிட்டத்தட்ட அனைத்து காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துவதற்கான மாசுக் கட்டுப்பாடுகள் தொடர்பான வரம்புகளையும் நீக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. இது உலகளாவிய வெப்பநிலை உயர்வை (காலநிலை மாற்றத்தை) கட்டுப்படுத்துவதற்கான முயற்சிக ளுக்கு மிக மோசமான பின்னடைவாக இருக்கும். ஏனென்றால் தொழில் புரட்சிக்குப் பிறகான கால கட்டத்தில் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களை அளவுக்கு அதிகமாக கட்டுப்பாடின்றி வெளி யிட்ட நாடு அமெரிக்கா என்பது குறிப்பி டத்தக்கது. டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளி லேயே திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு பைடன் நிர்வாகம் விதித்தி ருந்த தற்காலிகத் தடையை நீக்கினார். இதன் மூலம் எரிசக்தி நிறுவனமான எனர்ஜி டிரான்ஸ்ஃபர் பார்ட்னர்ஸ் முதல் காலாண்டிலேயே கடந்த ஆண்டை விட அதிக லாபத்தைப் பெற்றது. இந்த நிறுவனமும் அதன் தலைமை நிர்வாகி கெல்சி வாரனும் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து அவரது முக்கிய அரசி யல் நடவடிக்கைக் குழுவுக்கு சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளனர். புதைபடிவ எரிபொருள் நிறுவ னங்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வரும் நிலையில் அவர்களால் ஏற்படுகிற காலநிலை மாற்றம், புவி வெப்பமாதல், பெரும் புயல் சூறாவளிகளால் பாதிக் கப்பட்டுப் பலியாவது சாதாரண அமெரிக்கர்களாக உள்ளனர். இதனால் டிரம்ப்பின் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.