world

img

இந்தியா - அமெரிக்கா இடையே ‘நல்ல வர்த்தக ஒப்பந்தம்’ அமையுமாம்!

இந்தியா - அமெரிக்கா இடையே ‘நல்ல வர்த்தக ஒப்பந்தம்’ அமையுமாம்!

டாவோஸ் மாநாட்டில் டிரம்ப் தகவல் டாவோஸ் / வாஷிங்டன், ஜன. 22- சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற (WEF) மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் ஒரு “நல்ல வர்த்தக ஒப்பந்தம்” எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தனது “நெருங்கிய நண்பர்” என்றும், “அற்புதமான மனிதர்” என்றும் புகழ்ந்த டிரம்ப், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக நகர்வதாகக் குறிப்பிட்டார். கடந்த ஜூலை மாதம் கையெழுத்தாக வேண்டிய இந்த ஒப்பந்தம், சில தயக்கங்களால் தள்ளிப்போனது. தற்போது அமெரிக்காவின் வேளாண் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்து விடுவது தொடர்பாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் துவங்கியது  

ஷேக் ஹசீனா அரசு ராஜினாமா செய்த பிறகு, பிப்ரவரி 12-இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் ஜன.22 அன்று தொடங்கியது. யூனுஸ் தலைமையிலான  இடைக்கால அரசு ஹசீனாவின் ‘அவாமி லீக்’ கட்சிக்குத் தடை விதித்துள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் மாணவர்களின் தேசிய குடிமக்கள் கட்சியை உள்ளடக்கிய 10 கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடு கின்றன. மத அடிப்படைவாதிகளின் வன்முறைகள் அதிகரித்துள்ள சூழலில் அதைக் கட்டுப்படுத்தாத இடைக்கால அரசு, வங்கதேச தேசியவாத கட்சிக்கு (BNP) ஆதரவாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டும்  உள்ளது.

ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தியதாகவும் அறிவிப்பு மற்றொரு மு

க்கிய நிகழ்வாக, அமெரிக்காவின் 25 சதவீத அபராத வரி விதிப்பைத் தொடர்ந்து இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர்  ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் இந்த வரி விதிப்பு நடவடிக்கையால், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவுடனான வர்த்தகத்தைக் குறைத்துள்ளன. உக்ரைன் போருக்கு நிதி ஆதாரமாக இருப்பதாகக் கூறி,  ரஷ்ய எண்ணெய் யைத் தடுக்கும் நோக்கில், தொடர்ந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவையும் அமெரிக்கா தற்போது பரிசீலித்து வருகிறது. இந்த மசோதா நிறைவேறினால் சீனா உள்ளிட்ட நாடு களுக்குக் கடும் நெருக்கடி ஏற்படும் என்றும், இந்தியா ஏற்கெனவே தனது கொள்முதலைக் குறைத்து அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இணங்கியுள்ளதாகவும் பெசென்ட் சுட்டிக்காட்டினார்.