கொரியத் தொழிலாளர் கட்சியின் 9-ஆவது மாநாடு “அசாத்தியமான வெற்றிகளால் புதிய சகாப்தத்தைப் படைப்போம்”
பியாங்யாங், பிப். 23 – கொரியத் தொழிலாளர் கட்சியின் (WPK) ஒன்ப தாவது மாநாடு, சோசலிசக் கட்டுமானத்தின் புதிய மைல்கல்லாகப் பியாங்யாங் நகரில் எழுச்சியுடன் நடைபெற்று முடிந்தது. இந்த வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த மாநாட்டில், கட்சியின் பொதுச் செயலா ளராக கிம் ஜோங் உன் மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோதனைகள் நிறைந்த, உறுதியான பயணம் மாநாட்டின் தொடக்க உரையை ஆற்றிய கிம் ஜோங் உன், கடந்த ஐந்து ஆண்டுகாலப் போ ராட்டங்களை மிக விரிவாக ஆய்வு செய்தார். எட்டா வது கட்சி மாநாட்டிற்குப் பிந்தைய காலம் என்பது, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடு மையான சோதனைகளையும் இடர்ப்பாடுகளையும் சந்தித்த ஒரு காலமாகும் என்று அவர் குறிப்பிட்டார். “நமது சோசலிசக் கட்டுமானம் ஒருபோதும் அமைதி யான பாதையில் பயணம் செய்ததில்லை; ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளைப் போலச் சோதனைகள் நிறைந்த, அதே சமயம் மாபெரும் வெற்றிகளைக் குவித்த ஒரு காலத்தை நாம் கண்டதில்லை” என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். குறிப்பாக, எட்டாவது மாநாடு நடைபெற்ற சமயத் தில் நிலவிய கடுமையான புறச் சூழல்களை அவர் நினைவு கூர்ந்தார். அந்நிய சக்திகளின் இரக்க மற்ற பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகை கள், தொடர்ச்சியான இயற்கைச் சீற்றங்கள் மற்றும் உலகளாவிய பொதுச் சுகாதார நெருக்கடி ஆகி யவை நாட்டின் பாதுகாப்பிற்கும் மக்களின் நல் வாழ்விற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தன. இத்தகைய நெருக்கடியான சூழலிலும், எட்டாவது மாநாடு வகுத்தளித்த அறிவியல் ரீதியான திட்டங் கள், “அசாத்தியமானவற்றைச் சாத்தியமாக் கும்” உழைப்பால் வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதாரப் புரட்சியும் மக்கள் நல்வாழ்வும் கடந்த காலச் செயல்பாடுகளைச் சுயவிமர் சன ரீதியாக ஆய்வு செய்த தோழர் கிம் ஜோங் உன், ஏழாவது கட்சி மாநாட்டின் போது நிர்ணயிக்கப் பட்ட சில இலக்குகள் அறிவியல் ரீதியற்றதாக இருந்த தையும், அதனால் ஏற்பட்ட பின்னடைவுகளையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார். அத்தகைய காலாவதியான நடைமுறைகளை அகற்றி, “சாத்தி யமற்றது என்று தோன்றியவற்றைச் சாத்திய மாக்கும்” புதிய அணுகுமுறையின் மூலம், தற்போது முக்கியத் தொழில்துறைகள் பல பத்தாண்டு காலத் தேக்க நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார மும் தற்காலிக முன்னேற்றம் என்ற நிலையிலிரு ந்து மாறி, ஒரு நிலையான திட்டமிட்ட வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதை அவர் தரவுகளுடன் விளக்கினார். பழைய மற்றும் தேக்க நிலையில் இருந்த தொ ழில்துறை உள்கட்டமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டு, ஐந்தாண்டுத் திட்டம் இலக்குகளை எட்டியுள்ளது. தலைநகர் பியாங்யாங் மற்றும் இதர பிராந்தி யங்களை ஒரே நேரத்தில் மாற்றியமைக்கும் திட்டங் கள் மூலம், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம் படுத்துவதில் ஒரு புரட்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள் ளது. சுமார் 1,13,000-க்கும் மேற்பட்ட நவீன குடி யிருப்புகள் கட்டப்பட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இது வெறும் கட்டுமானப் பணி மட்டுமல்ல, சோசலிச அமைப்பின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றும் செயல் என்று மாநாட்டின் தீர்மானத்தில் போற்றப் பட்டது. மேலும், கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் கலைத் துறைகளில் வியத்தகு சாதனைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்த்தப்பட்டுள்ளன. தேசியப் பாதுகாப்பு மற்றும் சித்தாந்த வலிமை நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்ப தில் கொரிய மக்கள் ராணுவம் அடைந்துள்ள அபரி மிதமான வளர்ச்சியை மாநாடு அங்கீகரித்தது. எந்தவொரு ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலையும் எதிர் கொள்ளும் வகையில், ராணுவத்தைப் புரட்சிகர மான மற்றும் நவீன ஆயுதப் படைகளாக கிம் ஜோங் உன் அரசு உருமாற்றியுள்ளது. “நமது நாட்டின் கண்ணியம் மற்றும் கௌரவம் சர்வதேச அளவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள் ளது” என்று மாநாடு குறிப்பிட்டது. பொதுச் செயலாளர் என்ற முறையில், கட்சியின் வழிகாட்டும் கொள்கையான மார்க்சிய வழியிலான பொருளாதாரத் தன்னிறைவு (ஜூச்சே கொள்கை) என்பதை முன்னிறுத்தும் ‘கிம் இல் சுங் - கிம் ஜோங் இல்’ (Kimilsungism-Kimjongilism) பாதையை உயர்த்திப் பிடித்த கிம் ஜோங் உன், கட்சியை அமைப்பு ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் தூய்மையான ஒரு மக்கள் கட்சியாக மாற்றியுள்ளார். “மக்களே முதன்மையான வர்க்கம்” என்ற கொள்கையை முன்னிறுத்தி, அதிகாரத்துவத்திற்கும் பொ றுப்பற்றத் தன்மைக்கும் எதிராகத் தீவிரமான போ ராட்டத்தை அவர் முன்னெடுத்தார். புதிய சகாப் தத்திற்கான ஐந்து அம்சக் கட்சிக் கட்டுமானக் கொள்கை, கொரியப் புரட்சியை வழிநடத்துவதற் கான நிரந்தர உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. புதிய இலக்குகளும் ஒருமனதான தேர்வும் மாநாட்டின் இறுதி அமர்வில், கிம் ஜோங் உன் அவர்களைக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கும் முன்மொழிவு முன் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான கட்சி உறுப்பி னர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தப் பொறுப்பை கிம் ஜோங் உன் மீண்டும் ஏற்பதற்கு மாநாடு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இது கடந்த காலச் சாதனைகளுக்கான அங்கீகாரம் மட்டு மல்லாது, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை யுமாகும். பிரதிநிதிகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 9-ஆவது மாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் அதன் பிரதிநிதித்துவம் அமைந்திருந்தது. மாநா ட்டில் மொத்தம் 5,000 பிரதிநிதிகள் பங்கேற்றனர்; இதில் 8-ஆவது மத்தியக் குழுவின் உறுப்பினர்கள் 224 பேரும், கட்சி மற்றும் அரசியல் ஊழியர்கள் 1,902 பேரும், அரசு அதிகாரிகள் 747 பேரும் அடங் குவர். மேலும், 474 ராணுவ வீரர்கள் மற்றும் அடி மட்ட அளவில் பணியாற்றும் 1,524 முன்னணி ஊழி யர்களும் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டிருந்த னர். அறிவியல், கல்வி மற்றும் கலைத் துறையைச் சேர்ந்த 321 பிரதிநிதிகளுடன், 413 பெண் பிரதிநிதி களும் இதில் பங்கேற்றனர். இவர்களுடன் 2,000 பார்வையாளர்களும் கலந்துகொண்டனர். சோசலிசக் கட்டுமானத்தின் அடுத்த கட்ட வளர் ச்சிக்கான தெளிவான திட்டங்களை வகுத்துள்ள இந்த 9-ஆவது மாநாடு, கட்சியின் தலைமை யின் கீழ் புதிய வெற்றிகளைப் படைக்க உறுதிபூண் டுள்ளது. ஜூச்சே (Juche) எனும் தன்னிறைவுமிக்க பொருளாதாரத்துடன் கூடிய புரட்சியின் பாதையில் ஒரு வலுவான மற்றும் வளமான அரசை உரு வாக்குவதற்கான புதிய சகாப்தம் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. (கேசிஎன்ஏ)
