உகாண்டாவில் விபத்து : 63 பேர் பலி
உகாண்டா நாட்டின் நெடுஞ்சாலையில் நடந்த கோரமான சாலை விபத்தில் 63 பேர் பலி யாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறை அறிக்கையின்படி, இரண்டு பயணிகள் பேருந்து கள், ஒரு லாரி, ஒரு கார் என நான்கு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக் குள்ளாகியுள்ளன. வாகனங்கள் பல முறை உருண்டுள்ளது. தெரிய வந்துள்ளது. நள்ளி ரவில் வாகனம் ஒன்றை மற்றொன்று முந்திச் செல்ல முயன்ற போது இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டேங்கர் வெடித்து 35 பேர் பலி
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்ததில் 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த வெடிவிபத்தில் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாரி சாலையில் கவிழ்ந்த பிறகு அதிலிருந்து வெளி யேறிய பெட்ரோலை மக்கள் பிடிக்க முயன் றுள்ளனர். அப்போது திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டு டேங்கர் வெடித்து சிதறியுள்ளது என இச்சம்பவம் குறித்து அந்நாட்டின் சாலைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஐஷது சாது தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய்யை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை 2028 க்குள் படிப்படியாக நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் ஆதரவு தெரிவித் துள்ளனர். இது இன்னும் இறுதியாக வில்லை. ஆனால் ஐரோப்பிய நாடாளு மன்ற த்துடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பிய ஒன்றிய எரிவாயு இறக்குமதியில் ரஷ்யா 12 சதவீதம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிக் கும்பல்களை தடுக்க குவாதமாலாவில் புதிய சட்டம்
மத்திய அமெரிக்க நாடான குவாதமாலாவில் உள்ள குற்றவாளிக் கும்பல்களை தடுக்க அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டப்படி அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் எதி ரான குற்றங்களைச் செய்யும் பாரியோ 18, மாரா சால்வாட் ருச்சா ஆகிய கும் பல்கள் பயங்கர வாத அமைப்பு களாக வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற கும்பல்களை அடைத்து வைக்க ஒரு புதிய சிறைச்சாலையைக் கட்டவும் சட்டம் வழி வகுக்கிறது.
இரு பணயக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது
ஹமாஸ் அமைப்பு மேலும் இரண்டு பணயக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ் சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரி வித்துள்ளது. அக் டோபர் 10 இடைக் கால போர்நிறுத்தம் அமலானதிலிருந்து ஹமாஸ் அமைப்பு 13 பணயக்கைதி களின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. எனினும் இன்னும் 13 பணயக் கைதிகளின் உடல்கள் செஞ்சிலுவை சங்கம் மூலமாக இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.