இந்தியா-பாகிஸ்தான் மோதல் 11 விமானங்கள் வீழ்த்தப்பட்டன - டிரம்ப்
வாஷிங்டன்,பிப்.20- இந்தியா- பாகிஸ்தான் மோத லின் போது 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டாகவும் நான் வரி விதிப்பேன் என மிரட்டியதால் போர் நிறுத்தப்பட்டது எனவும் காசா அமைதி வாரியக் கூட்டத்தில் டிரம்ப் கூறியுள்ளார். ஐ.நா அவையின் முக்கியத்து வத்தை குறைத்து, அதை முடக்கும் வகையில் ‘காசா அமைதி வாரி யத்தை’ டிரம்ப் உருவாக்கியுள்ளார். இந்த வாரியத்தில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பாகிஸ்தான், அர்ஜெண்டினா, ஹங்கேரி உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஜனவரி 22 அன்று டாவோஸில் நடைபெற்ற இந்த வாரியத்தின் அறிமுக விழாவில் இந்தியா பங்கேற்க வில்லை. எனினும் இவ்வமைப்பில் இந்தியா உறுப்பினராக இணையுமா இணையாதா என வெளியுறவுத்துறை துவக்கத்தில் தெளிவுபடுத்தாமல் இருந்தது. கடந்த வாரம் வரை இந்த அமைப்பில் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக மட்டுமே இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடத்த இவ்வ மைப்பின் முதல் கூட்டத்தில் இந்தியா பார்வையாளராக பங்கேற்றுள்ளது. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைப்பற்றிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய போது தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை நான் தான் தடுத்து நிறுத்தனேன் என டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். அதாவது இந்தி யப் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரத மர் ஷெரீப் ஆகியோரைத் தான் நேரடி யாகத் தொடர்பு கொண்டு பேசியதாக வும், “இரு நாடுகளின் மீதும் 200 சத வீத வரி விதிப்பேன், உங்களுடனான வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்து விடுவேன் என எச்சரித்தேன். பணம் என்று வரும்போது எல்லாம் சரியாகிவிடும்” என்றும், அதன் பின்னரே மோதல் முடிவுக்கு வந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். மேலும் அந்த மோதலில் சுமார் 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்னால் தான் நிறுத்தப்பட்டது. நான் இரு நாடுகளையும் வர்த்தகம் தொடர்பாக மிரட்டினேன் என டிரம்ப் பலமுறை கூறிவிட்டார். ஆனால் ஒரு முறை கூட அந்த கூற்று தவறு என பிரதமர் மோடியோ இந்திய வெளியுறவுத்துறையோ வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
