world

img

ஆப்கானிஸ்தான்- நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.  

ஆப்கானிஸ்தான் பாக்லான் மாகாணத்தின் நஹ்ரின் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 13 தொழிலாளர்கள் சிக்கி கொண்ட நிலையில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். மேலும் 3 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, கனமழை காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்ததாக செனாரக் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் பஷீர் அகமது கூறினார்.  

மேலும் நஹ்ரின் மாவட்ட ஆளுநர் குவாரி மஜித் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். அதனைதொடர்ந்து சுரங்கத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை கண்டறிவதற்காக படைகள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.