states

img

பீகார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 10 பேர் பலி    

பீகாரில் பட்டாசு தயாரிக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாகினர், 9 பேர் படுகாயமடைந்தனர்.  

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள கஜ்வாலிசாக் பகுதியில் ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது நேற்று இரவு வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயமடைந்த 9 பேரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

இதுகுறித்து பகல்பூர் மாவட்ட நிர்வாகம் கூறுகையில், கஜ்பலிசாக் பகுதியில் உள்ள மகேந்திர மண்டல் என்பவரது வீட்டில் நேற்று இரவு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வெடிச்சத்தத்தின் தாக்கத்தால் மண்டல் என்பவரின் வீடும் அதை ஒட்டிய 2 கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. ஜேசிபி உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.