tamilnadu

img

ஒரே நாளில் 10 பேர் பலி

சென்னை:
கொரோனா தொற்றால் சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.தமிழகத்தில் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண் ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. பலி எண்ணிக்கை 120-ஐ தாண்டிவிட்டது.குறிப்பாக  சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினசரி 500 முதல் 600 என்று அதிகரித்துக்கொண்டே போவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.