world

img

2023-ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2023-ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மவுங்கி ஜி. பவேண்டி, லூயிஸ் ஈ.ப்ரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ.எகிமோவ் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் இயற்பியல் துறையில் நோபல் பரிசு கடந்த 2 நாட்கள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மவுங்கி ஜி. பவேண்டி, லூயிஸ் ஈ.ப்ரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ. எகிமோவ் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.