world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் மேற்கத்திய அரசியல்வாதிகள் சலிப்படைந்துவிட்டனர் எனவும் உதவும் கைகளை காயப்படுத்துவது போல ஜெலன் ஸ்கியின் அணுகுமுறை உள்ளது எனவும் ரஷ்ய செய்தி தொடர்பாளர் மரியா சக்கோரவா தெரிவித்துள்ளார்.
  2. பேச்சு வார்த்தைகளுக்கு நாங்கள் தயாராக உள் ளோம் எனவும் ஆனால் ஜோடி நடனமாட இருவர் தேவை எனவும் அமெரிக்கா நடனத்தை தடுக்க “பிரேக் டான்ஸ்” ஆடுகிறது எனவும் ரஷ்ய வெளி யுறவு அமைச்சர் லாவ்ரவ் கூறியுள்ளார்.
  3. ரஷ்ய தடைகள் காரணமாக லாத்வியாவில் மின்சா ரம்/பெட்ரோல்/இயற்கை வாயு விலைகள் இரு மடங்காக உயர்ந்துள்ளன.
  4. ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் அமலாக்க வேண்டும் என செர்பியாவை ஜெர்மனி வற்புறுத்தியுள்ளது.
  5. ஆனால் செர்பியா ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு நாளும் 200 வீரர்களை இழந்து கொண்டுள் ளோம் எனவும் மேற்கத்திய நாடுகள் உடனடியாக மிக அதிக ஆயுதங்களை தர வேண்டும் எனவும்ஜெலன் ஸ்கியின் உதவியாளர் மிகாயில் பொடொலியாக் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
  6. ரஷ்ய தடைகள் அமெரிக்க பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் அத னால் விலைவாசிகள் இப்போதைக்கு இறங்கும் வாய்ப்பு இல்லை எனவும் அமெரிக்காவின் நிதி அமைச்சர் ஜேனட் யெல்லென் கூறியுள்ளார்.
  7. உக்ரைனுக்காக போரிட வந்து சிறைபிடிக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்களுக்கு மரண தண்டனைவிதித் ததை பல மேற்கத்திய நாடுகள் விமர்சித்துள்ளன. ஆனால் அவர்கள் உக்ரைன் செல்லாமல் தடுக்க இந்த தேசங்கள் எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கும் நெதர்லாந்தும் உக்ரைன் ஐரோப்பிய ஒன் றியத்தில் இணைவதை எதிர்க்கின்றன.
  8. இந்த போரி னால் உக்ரைன் எந்த நன்மையும் பெறாது போலும்!
  9. தடைகளுக்கு பின்னர் ரஷ்யாவின் வருமானம் அதி கரித்துள்ளது என்பதை அமெரிக்காவின் சர்வதேச எரிசக்தி ஆலோசகர் அமோஸ் ஹோஸ்டின் தெரி வித்துள்ளார்.
  10. நேட்டோவை விரிவாக்கம் செய்து பின்லாந்தையும் சுவீடனையும் இணைப்பதற்கு அமெரிக்க செனட் சபை அங்கீகாரம் தந்துள்ளது. ஐரோப்பாவை ஒரு வழி பண்ணாமல் அமெரிக்கா ஓயாது போலும்!