- பிரான்சு/ இத்தாலி/ ஜெர்மனி/ ருமேனியா ஆகிய நாடுகள் உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளன. வேறு சில நாடுகள் எதிர்க்கின் றன.
- முரண்பாடுகளில் ஐரோப்பா! இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி உட்பட இரண்டு அரசியல் கட்சிகளை உக்ரைன் தடை செய்துள்ளது. எனினும் உக்ரைன் ஜனநாயக நாடு என மேற்குலகம் சொல்கிறது.
- எரிபொருள் தொடர்பான பிரச்சனைகளில் ஜெர் மனி ஒத்துழைப்பு நல்காவிட்டால் பற்றாக்குறை யும் கடும் விளைவுகளும் ஜெர்மனிக்கு காத்திருக் கின்றன என ரஷ்யா எச்சரித்துள்ளது.
- மேற்கத்திய ஆயுதங்கள் கிடைத்தவுடன் கிரீமியா வை ரஷ்யாவிடமிருந்து மீட்போம் என உக்ரைன் எச்சரித்துள்ளது.
- பகற்கனவா என சிலர் ஐயம் எழுப்புகின்றனர். கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதிக்காக நடைபெறும் உக்கிரமான போரில் ஒரு நாளைக்கு 1000 பேர் உயிரிழக்கின்றனர் அல்லது நிரந்தர காயம் அடைகின்றனர் என டேவிட் அக்ரமையா எனும் உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.
- அமெரிக்கா வுக்காக நடக்கும் இந்த உயிரிழப்புகள் தேவைதானா? ரஷ்யாவை தண்டிக்க வேண்டும் என கூறுபவர் களை விட உக்ரைன்-ரஷ்யா போரை சமாதானப் பூர்வமாக தீர்க்க வேண்டும் என எண்ணும் ஐரோப்பிய ஒன்றிய மக்கள் கூடுதலாக உள்ளனர் என வெளியுறவுக்கான ஐரோப்பிய கவுன்சில் நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.
- மக்களின் எண்ணங்களை ஐரோப்பிய நாடுகள் அமலாக்குமா? தனது நேச நாடுகளுக்கு மட்டும்தான் விவசாயப் பொருட்களையும் தானியங்களையும் ஏற்றுமதி செய்வோம் என ரஷ்ய விவசாய அமைச்சர் டிமிட்ரி பட்டுருஷேவ் தெரிவித்துள்ளார்.
- பனிப்போர் காலத்தைவிட கூடுதலான விரோதத்தை அமெரிக்கா இப்பொழுது ரஷ்யா மீது வெளிப்படுத்துகிறது என ரஷ்ய அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குற்றம்சாட்டி யுள்ளார்.
- அமெரிக்கா செல்வாக்கு இழப்பதன் விளைவா இது?
- முதல்முறையாக உக்ரைனில் போரிட்ட அலெக் சாண்டர் டுருகே மற்றும் ஆண்டி ஹுஹின் எனும் இரு அமெரிக்க வீரர்கள் ரஷ்ய படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக டெலிகிராப் ஏடு வெளிப் படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இது விவாதத்தை விளைவித்துள்ளது.