- உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை கண்டித்து ஜெர்மனியில் உள்ள இரண்டாம் உலகப் போரின் நினைவு சின்னத்திலிருந்து ரஷ்யாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மீது விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக ஐரோப்பிய வங்கிகளுக்கு ரூ 75,000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- உக்ரைன் போரை காரணம் காட்டி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலிருந்து ரஷ்யாவை வெளியற்றுவது கடினம் என அமெரிக்கா ஒத்துக் கொண்டுள்ளது.
- உக்ரைனின் மரியபோல் நகரில் உள்ள மக்கள் ரஷ்ய ராணுவத்தின் உதவியுடன் வெளியேறிய பின்னர் ஜெர்மனியின் ஸ்பீகல் எனும் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பொழுது உக்ரைனை விமர்சித்துப் பேசினர்.
- இந்த காணொளியை அந்த ஊடகம் அகற்றிவிட்டது. ஒளிபரப்பவில்லை. இது என்ன விதமான ஜனநாயகம்? ஜெர்மனியில் உள்ள ரஷ்ய பத்திரிக்கையாளர்களின் வீட்டில் குண்டுகள் எறியப்பட்டன. இதனை செய்தது யார் என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- கனடாவின் புகழ் பெற்ற ஸ்னைப்பர் (3 கி.மீ அளவுக்கு வெகு தூரத்திலிருந்து சுடுபவர்) வாலி என்பவர் உக்ரைனுக்கு ஆதரவாக போரிட அங்கு சென்றார்.
- இப்பொழுது கனடா திரும்பிவிட்டார். உக்ரைனில் எதுவுமே சரியாக இல்லை எனவும் ராணுவத்துக்கு முறையான தலைமை இல்லை எனவும் வெளிநாட்டு வீரர்களுக்கு ஆயுதங்கள் தரப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்கா அனுப்பும் நிதி உதவிகளை சிலர் பதுக்கி கொள்கின்றனர் எனவும் ஆயுதங்களை ரஷ்ய படைக்கே விற்கினர் எனவும் பகீர் தகவல் கூறியுள்ளார்.
- உக்ரைனுக்கு ஆதரவாக செய்யும் உளவு பணிகள் வெளியே கசியக் கூடாது என பைடன் உளவு அமைப்பு களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நேட்டோ தலைவர்கள் அணு யுத்தம் குறித்து கவலைப்படாத போக்கு உள்ளது என அமெரிக்கா வுக்கான ரஷ்ய தூதர் அன்டனோவ் கவலை தெரி வித்துள்ளார்.
- உக்ரைன் போருக்கு பின்னர் முதல் முதலாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அமைதி தீர்வு காண வேண்டும் எனும் பொது செயலாளரின் முயற்சியை ஆதரிப்பது என அனைத்து நாடுகளும் விருப்பம் தெரிவித்தன.
- பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண ரஷ்யாவின் விருப்பத்தை இது தெளிவாக வெளிப்படுத்துகிறது என மெக்சிகோவின் பிரதிநிதி கூறினார்.