world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. போலந்தில் ரஷ்ய தூதர் மீது சிவப்பு திரவம் ஊற்றியதற்கு எதிர்வினையாக ரஷ்யாவில் உள்ள போலந்து தூதரகம் முழுவதும் சிவப்பு மையால் குளிப்பாட்டப்பட்டது. ரஷ்ய படைகளால் விடுவிக்கப்பட்ட உக்ரைனின் கெர்சோன் எனும் பகுதி மக்கள் தாங்கள் ரஷ்யா வுடன் இணைய விரும்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.
  2. உக்ரைனில் ரஷ்யா தனது திட்டத்தில் வெற்றி பெற்றுக் கொண்டுள்ளது என நியூயார்க்  டைம்ஸ் முதல் முறையாக செய்தி வெளியிட்டுள்ளது.
  3.  அமெரிக்க அங்காடிகளில் குழந்தைகள் உணவு தீர்ந்து கொண்டுள்ளது. தாய்மார்கள் கவலையில் உள்ளனர். ஆனால் நமது ஆட்சியாளர்கள் உக்ரை னுக்கு 40 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.
  4. உலகின் எந்த ஒரு தேச மும் இப்படி செயல்படாது என ஜேக் பெசோபியக் எனும் ஊடகவியலாளர், காட்டம் தெரிவித்துள்ளார். இவர் தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
  5. பல்கேரிய தலைநகர் சோபியாவில் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் அளிப்பதை கண்டித்து ஏராள மான பேரணிகள் நடந்துள்ளன. முதலில் உள்நாட்டைப் பற்றி கவலைப்படுங்கள்; பின்னர் மற்ற நாடுகள் குறித்து யோசிக்கலாம் என மக்கள் கூறுகின்றனர்.
  6. ரஷ்யாவுக்கு எதிராக போரிட உக்ரைன் ராணுவம் “மேற்கத்திய மயமாக்கப்பட்டுள்ளது” என பெண்டகன் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்காவின் 40 பில்லியன் டாலர் உதவியை அனைத்து ஜனநாயக கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்களும் ஆதரித்துள்ளனர். ஆனால் 50க்கும் மேற்பட்ட குடியரசு கட்சி உறுப்பினர்கள் எதிர்த்து  வாக்களித்துள்ளனர்.
  7. முதலில் பைடன் அமெரிக்க குழந்தைகளின் பால் பவுடர் பிரச்சனை யை தீர்த்துவிட்டு உக்ரைன் குறித்து கவலைப்பட ட்டும் என இவர்கள் கோபம் காட்டுகின்றனர்.
  8. உக்ரைனில் உள்ள உயிரி ஆயுத பரிசோதனைக் கூடங்களில் கிடைக்கும் லாபத்தை தமது தேர்தல்  செலவுகளுக்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர்  பயன்படுத்தியுள்ளனர் என ரஷ்யா குற்றம்சாட்டி யுள்ளது.
  9. எரிசக்தி விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ள தால் பிரிட்டனில் சில பகுதிகளில் மக்கள் வீட்டில் வெப்பத்தை பராமரிப்பதற்காக விறகுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.