world

உக்ரைன்- ரஷ்யா நான்காம் சுற்று பேச்சு

கீவ், மார்ச் 14- உக்ரைன் - ரஷ்யா இடையே மார்ச் 14 அன்று காணொலி வாயிலாக மீண்டும் பேச்சு வார்த்தை நடக்க உள்ளதாக உக்ரைனிய தூதுக்குழுவை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியானது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடரும் ரஷ்ய மற்றும் உக்ரேனியாவின் ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தை யில் முன்னேறி வருவதாக இரு தரப்பும் கூறின.  இதனையடுத்து  இரு நாட்டு பிரதிநி திகளுக்கு இடையேயான நான்காம் சுற்று பேச்சுவார்த்தை மார்ச் 14 திங்களன்று நடைபெற்றது.