world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. உக்ரைனுக்கு அணு ஆயுதங்கள் தரமாட்டோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் நேட்டோவில் இணைவதை ஆட்சேபித்த  ரஷ்யா அந்த தேசம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணை வதை ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தைகளில் ஆட்சேபிக்கவில்லை.
  2. ஆனால் உக்ரைன் பேச்சுவார்த்தைகளை உதாசீனப்படுத்துவதாலும் டோன்பாஸ் பகுதிகளில் மக்கள் மீது தாக்குதல் நடத்துவ தாலும் ரஷ்யா தனது நிலையை மாற்றிக் கொண்டுள் ளது. உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணை யக்கூடாது என்பது ரஷ்யா தற்போதைய நிலை ஆகும்.
  3. ரஷ்யா நமக்கு எதிரியும் அல்ல; உக்ரைன் நேச நாடும்  அல்ல! எனவே உக்ரைனுக்கு 40 பில்லியன் டாலர்கள் தருவதை ஏற்க முடியாது என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பால் கோசர் கூறியுள்ளார். உள்ளூரில் குழந்தைகளுக்கான உணவுப் பற்றாக்குறையை முதலில் நீக்குங்கள் என கோரியுள்ளார். ரஷ்ய எண்ணெய் மீது தடைவிதிக்க ஜெர்மனி தயாராக  இல்லை என பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹெபக் கூறியுள்ளார்.
  4. கடந்த சில நாட்களில் மிகவும் சிறந்த முறையில் வலுவடைந்த நாணயம் ரஷ்யாவின் ரூபிள்தான் என பிலம்பர்க் எனும் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
  5. பாவம் ஜோ பைடன்! பின்லாந்து நேட்டோவில் இணைவது ரஷ்ய பாது காப்புக்கு அச்சுறுத்தல் எனவும் அதற்கான விளைவுகள் இருக்கும் எனவும் ரஷ்யா எச்சரித்துள்ளது. ர
  6. ஷ்ய நிதியின் ஒரு பகுதியை சுவிட்சர்லாந்து வங்கிகள் விடுவித்துள்ளன. தடைகள் நீர்த்துப் போகின்றனவா?  அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரித்த 40 பில்லியன் டாலர்கள் உதவியை செனட் சபையின்  அங்கீகாரத்துக்கு வந்த பொழுது ரான்ட் பால் எனும் செனட்டர் அதனை அங்கீகரிக்க மறுத்துள்ளார்.
  7. இந்த நிதி யார் கைகளுக்கு செல்லும் என்பதை கண்காணிக்க குழு தேவை என அவர் வலியுறுத்துகிறார். அவர் தவிர ஏனைய 99 செனட்டர்களும் அங்கீகரிக்க தயா ராக உள்ளனர். எனவே அவர்கள் ராண்ட் பால் மீது கோப மாக உள்ளனர். ஆனால் இவர், எனது விசுவாசம் அமெ ரிக்க அரசியல் சட்டத்துக்குத் தான்; உக்ரைன்போன்ற வெளி நாடுகளுக்கு அல்ல  என கூறியுள்ளார்.
  8. உக்ரைனின் ரஷ்ய மொழி பேசும் லுகான்ஸ்க் மக்களுக்கு காச நோய் உருவாக்கும் கிருமிகளை செலுத்தி  பரிசோதனை செய்ய அமெரிக்காவுக்கு உக்ரைன் அரசாங்கம் அனுமதி கொடுத்ததற்கான ஆவண சான்று கள் கிடைத்துள்ளதாக ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.