world

img

நேரடியாக டீசலை ரஷ்யாவிடமிருந்து வாங்க உடன்பாடு: பிரேசில் ஜனாதிபதி அறிவிப்பு

நேரடியாக டீசலை ரஷ்யாவிடமிருந்து வாங்குவது தொடர்பான உடன்பாட்டை எட்டப்போவதாக பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனாரோ அறிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பே இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுடன் போல்சோனாரோ பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அந்தப் பேச்சுவார்த்தையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து போல்சோனாரோ, "இன்னும் 60 நாட்களில் ரஷ்யாவிடமிருந்து டீசல் நமக்கு வந்து சேரும். இதற்கான வாய்ப்பு ஏற்கனவே உருவாகிவிட்டது. ரஷ்யா எல்லாருடனும் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் மீது போடப்பட்ட தடைகள் எதுவும் எடுபடவில்லை" என்று குறிப்பிட்டார்.

தனது டீசல் தேவையில் 30 விழுக்காட்டை பிரேசில் இறக்குமதி செய்கிறது. இப்போதைய நிலையில் யாரிடமிருந்து வாங்குகிறோம் என்பது முக்கியமில்லை. யார் குறைவான விலைக்குக் கொடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.