பாரிஸ், செப். 25- பிரான்ஸ் நாட்டில் பொது அமைதி வேண்டி யும் இனவெறியைக் கண்டித்தும், காவல் துறையின் வன்முறைக்கு எதிராகவும் நாடு முழுவதும் 80,000 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூன் மாதம் நான்டெர்ரே என்ற பகுதி யில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நஹெல் என்ற 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வெடித் தது. அதன் பிறகு மூன்று மாதங்கள் கழித்து இந்தப் போராட்டம் நடந்துள்ளது. “காவல்துறை வன்முறைக்கு எதிரான தேசிய ஒருங்கிணைப்பு” என்ற பெயரில் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள், அர சியல் அமைப்புகளால் காவல்துறையின் வன் முறைக்கு எதிரான பிரச்சாரம் நாடுமுழுவதும் துவங்கப்பட்டது. போராட்டக் குழுவின் தகவலின்படி நாடு முழுவதும் 80,000 பேரும் தலைநகர் பாரிசில் மட்டும் 15,000 க்கும் மேற்பட்டோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர் என தெரிய வந்துள்ளது.