world

img

‘பொது நன்மைக்காக கிறிஸ்தவ- மார்க்சிய ஒத்துழைப்பு தேவை’

கிறிஸ்தவர்களும் மார்க்சிஸ்டுகளும் ‘பொது நன்மைக்காக’ பரந்த உரை யாடலில் ஒத்துழைக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸின் அறைகூவலுடன் ‘சத்திய தீபம்’ வார இதழ் அழைப்பு விடுத்துள்ளது. ஜனவரி 16 சத்தியதீபம் வார இதழில் ஐரோப்பிய இடதுசாரி அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்களின் அமைப்பான ‘டயலொப்’ உடனான கலந்துரையாடலில் போப்பின் அறிக்கை இடம்பெற்றது. டய லொப் (Dialop) என்பது கத்தோலிக்க போத னைகளுக்கும் மார்க்சிய சித்தாந்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் ஒரு இயக்கமாகும்.

“உரையாடல் எப்போதும் அவசியம், அதற்கு பயப்பட வேண்டாம். அரசியல் என்பது மனித குலத்திற்கு உதவுவது. நிதி மற்றும் மூலதன சக்திகளால் மட்டும் கட்டுப்படுத்தப் படுவதை அனுமதிக்க முடியாது. சமூகத்தில் பிளவை உருவாக்கும் குறுகிய அணுகுமுறைகளுக்குப் பதிலாக, திறந்த மனதுடன், உரையாடல் மற்றும் பிறரிடம் கேட்டல் மூலம் அரசியல் மற்றும்  பொருளாதார முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு சிறந்த உலகத்தை கனவு காண்பதை நிறுத்தாதீர்கள்” என்று போப் விளக்கினார்.

2013 இல், சந்தை சக்திகளில் நம்பிக்கை  வைக்க வேண்டாம் என்று அப்போஸ்த லிக்க அறிவுரையில் தனது நம்பிக்கை யாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். பொருளாதார வளர்ச்சியை விட நியாய மான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வருமானத்தை சிறப்பாகப்  பகிர்ந்தளிப்பதற்கும், வேலைவாய்ப்புக் கான ஆதாரங்களை உருவாக்குவதற்கும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்து வதற்கும் அது முடிவுகளையும் திட்டங்களை யும் கொண்டிருக்க வேண்டும். அது நலத்திட்டங்களின் மட்டத்தில் மட்டுப் படுத்தப்படக்கூடாது என்றும் போப் சுட்டிக் காட்டியுள்ளார்.