நியூயார்க், ஆக.16- தங்களின் உரிமைகளை கேட்டு வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததற்காக எலான் மஸ்கை குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பாராட்டியதைத் தொடர்ந்து, அவர்கள் இருவர் மீதும் புகார் கொடுக்கப் பட்டுள்ளதாக ஒன்றுபட்ட வாகனத் தொழிலா ளர்கள் சங்கம் (UAW) தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடு கிறார். இவருக்கு உலகின் முன்னணி பணக் காரரும் தீவிர வலதுசாரி ஆதரவாளருமான எலான் மஸ்க் தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் டிரம்பிடம் ட்விட்டர் நேரலை யில் எலான் மஸ்க் நேர்காணல் ஒன்றை நடத்தினார். அந்த உரையாடலின் போது எலான் மஸ்க், உங்கள் வேலைகளை நான் கவனித்து வருகிறேன்.
“நீங்கள் உள்ளே வந்து, தொழிலா ளர்களை பார்த்து நீங்கள் வேலையை விட்டு போக விரும்புகிறீர்களா என கேட்டீர்கள், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டார்கள். உடனே உங்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்குகிறேன் என தொழி லாளர்களை பணிநீக்கம் செய்து அறி வித்தீர்கள் என கூறிய டிரம்ப், பணி நீக்கம் செய்வதில் மஸ்க் சிறந்து விளங்குகிறார் என அவரை பாராட்டவும் செய்துள்ளார். இதன்பிறகு இருவரும் நேரலையில் சிரித்துக்கொண்டனர்.
இந்த நேரலை உரையாடலை 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கேட்டுள் ளனர். மேலும் தற்போது வரை 2.8 கோடிக்கும் அதிகமான மக்கள் அதனை கேட்டுள்ளனர்.
இந்த இருவரின் கருத்துக்களும் தொழிலா ளர்கள் முன்னெடுக்கும் சட்டப் போராட்டங்க ளுக்கும், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட் டங்களுக்கும் ஆதரவாக நிற்கும் தொழிலா ளர்களை அச்சுறுத்தும் சட்டவிரோத முயற்சி கள் என்று ஒன்றுபட்ட வாகனத் தொழிலாளர் கள் சங்கம் (UAW ) குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டத்தின்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக தொழி லாளர்களை பணிநீக்கம் செய்ய முடியாது. இருந்தும் பணிநீக்கம் செய்து தொழிலாளர்க ளை அச்சுறுத்துவது தேசிய தொழிலாளர் உறவுச் சட்டத்தின் படி சட்டவிரோதமானது என்றும் அத்தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவரான ஷான் ஃபைன் கூறுகையில், டிரம்ப் தொடர்ந்து தொழிலாளர் சங்கத்திற்கும் தொழிலாளர் உரி மைக்கும் எதிராகவே இருந்து வருகிறார். இதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகி றோம். எலான் மஸ்க் போன்ற பெரும் கோ டீஸ்வரர்களுக்கு தொழிலாளர் உரிமை களை நசுக்கும் ஆட்சியாளர்களே தேவைப் படுகிறார்கள்.
எனவே தான் டிரம்பை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க் ஒவ்வொரு மாதமும் 45 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 377 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.