ஸ்காட்லாந்து அரசு தனது நாட்டின் பெண்கள் அனைவருக்கும் நாப்கின், டாம்பன் போன்ற பொருட்களை இலவசமாக வழங்க சட்டம் நிறைவேற்றியுள்ளது.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின், டாம்பன் போன்ற பொருட்களை இலவசப் பொருட்கள் பட்டியலில் சேர்த்து, ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.24) சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுக்கு 236 கோடி ரூபாய் ஒதுக்கப்படவிருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், பெண்களுக்கு சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை ஸ்காட்லாந்து பெற்றுள்ளது.