சியோல், ஜூன் 9 - முதல் முறையாக சாம்சங் நிறுவன தொழி லாளர்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்ட மாக கருதப்படுகிறது. தென் கொரிய பொருளா தாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களுக்கு போதிய ஊதிய உயர்வு, போனஸ், விடுமுறைகள் ஆகியவற்றை கொடுக்க மறுத்து வருகிறது. இதற்காக பல கட்ட பேச்சுவார்தை நடத்திய பிறகும் தொழிலாளர்களின் கோரிக்கை கள் நிறைவேற்றப்படாததால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
உலகளவில் வளர்ந்துள்ள தொழில்நுட்பம், சர்வதேச போட்டிகள் ஆகியவற்றிக்கு இடையே செயற்கை நுண்ணறிவு மூலம் குறைக்கடத்தி களையும், சிப்களையும் உருவாக்க சாம்சங் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவால் பல நூறு தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். அந்த இழப்பை சமாளிக்க நிவாரணத் தொகை மாற்றுப் பணி என எந்த அறிவிப்பும் இன்றி தனது லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்டு சாம்சங் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ள நிலை யில் தொழிலாளர்கள் தங்களது அடிப்படைக் கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜூன் 7 அன்று போராட்டம் நடத்தினர்.
சாம்சங் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் தொழிற்சங்கத்தை மதிக்காமல் உதாசீனப்படுத்தி வந்தது என அந்நாட்டின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியனின் துணைத் தலைவரான லீ ஹியூன் குக் தெரிவித்துள்ளார்.
சாம்சங் நிறுவனத்தில் 5 தொழிற் சங்கங்கள் உள்ளன அதில் மிகப்பெரும் சங்கமாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் உள்ளது. மேலும் அந்த சங்கம் உலகில் உள்ள சாம்சங் தொழி லாளர்களில் 5 இல் 1 பங்கு - அதாவது 28,000 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
மேலும் வேலை நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 75 சதவீதம் பேர் வேலைநிறுத்தத் திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக சிப் மற்றும் குறைகடத்தி உற்பத்தியில் உலகளவில் முதன்மை நிறுவன மாக இருந்த சாம்சங் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வந்த பிறகு பிற நிறுவனங்களிடம் இருந்து பின்னடைவை சந்தித்துள்ளது என கூறப்படுகிறது. இவ்வாறு சிறிய பின்னடைவு இருந்தபோதிலும் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் நிறுவனத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் சாம்சங் நிறுவனம் உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளராகவே இருந்து வருகிறது என்று சர்வதேச சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ட்ரெண்ட்ஃபோர்ஸ் தெரிவித்துள்ளது
தென் கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்கனவே உள்ள மருத்துவர்களின் கோரிக்கை களை நிறைவேற்றாமல் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசின் முடிவுக்கு எதிரிப்பு தெரிவித்து 10,000 க்கும் அதிகமான இளம் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலரும் தங்களது பணி யை ராஜினாமா செய்தனர். அதே போல ஆயி ரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் அந்நாட்டின் தொழிலாளர் விரோத கொள்கை களை கண்டித்து போராட்டம் நடத்தினர். எனினும் சாம்சங் நிறுவனத்தின் தீவிர தொழிற்சங்க விரோதப் போக்கின் காரணமாக வேலை நிறுத்த போராட்டம் நடத்திடாத நிலையில் வரலாற்றில் முதன்முறையாக சாம்சங் தொழிலாளர்கள் ஜூன் 7 அன்று போராட்டத்தை நடத்தியுள்ளனர்.